Cricket
காதலி சொன்னதால் இந்திய அணியை அசிங்கப்படுத்திய ஜிம்பாப்வே வீரர்… டி20ல் நடந்த களேபரம்…
இந்திய அணியின் இளம் வீரர்கள் ஜிம்பாப்வே சென்று விளையாடி வருகின்றனர். இதில் டி20 போட்டியில் அவர்களை அவமதிக்கும் விதமாக ஜிம்பாப்வே பந்துவீச்சாளர் நடந்துக்கொண்டது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்திய டி20 உலக கோப்பை வென்ற பிறகு தற்போது ஜிம்பாப்வே தொடரில் விளையாடிக்கொண்டு இருக்கிறது. இதன் முதன் டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி முதலில் ஆடி 115 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி வெகுவாக தடுமாறியது.
அதன்படி வரிசையாக விக்கெட்களும் வீழ்ந்தது. இதில் இந்திய அணியின் விக்கெட்கீப்பர் ஜிம்பாப்வே அணியின் பவுலர் லூக் ஜோங்வே வீசிய பந்தில் 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டாகினார். இந்த விக்கெட்டை கொண்டாட எண்ணிய லூக் தன்னுடைய ஷூவை கழட்டி காதில் போன் பேசுவது போல வைத்தார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பந்துவீச்சாளர் விக்கெட்டை கொண்டாடுவது தவறில்லை. இது அவரை அசிங்கப்படுத்துவது போல நடப்பது இல்லையா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து பேசிய லூக் ஜோங்வே, இப்போட்டியின் முதல் நாள் என் காதலியுடன் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது விக்கெட் விழுந்தால் எப்படி கொண்டாடலாம் என விவாதித்தோம். அவர்தான் இப்படி செய்யலாம் என ஐடியா கூறியதாகவும் தெரிவித்து இருந்தார். லூக்கின் இந்த செயலால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.
ஜிம்பாப்வேவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய இந்திய அணி இரண்டாவது டி20 போட்டியில் ருத்ர தாண்டவம் ஆடியது. அந்த வகையில் இரண்டாவது டி20ல் 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.