ஒரு இந்திய குடிமகன் என்று நிரூபிப்பதற்கு அடையாளமாக விளங்குவது ஆதார் கார்டு. ஆதார் கார்டு நம்பர் இல்லாமல் எந்த ஒரு தனிநபராலும் தங்களுடைய வாழ்வியலை சாத்தியமாக முடியாது. ஆதார் அட்டை குறித்த புதிய வசதிகளை UIDAI அமைப்பு கொண்டு வர உள்ளது.
இதன் நோக்கம் முன்பை விட அதிக பாதுகாப்பு மற்றும் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையானதாக இருக்கும் என்று UIDAI தெளிவுப்படுத்துகிறது. மேலும் ஆதார் கார்டை தற்போது ஆன்லைன் அப்டேட் செய்யும் வசதியும் கொண்டுள்ளது.
இதுவரை ஆதார் கார்டில் ஏதும் மாற்றம் செய்ய வேண்டுமானால் மக்கள் ஆதார் சேவை மையத்துக்கு போக வேண்டியதாய் இருந்தது. இனி ஆன்லைன் மூலம் எளிதாக UIDAI போர்ட்டல் மூலம் சரிபார்க்க முடியும்.
இதனால் செயல்முறை வேகமாகவும் பாதுகாப்பானாதாகவும் நம்பகத்தன்மையாகவும் இருக்கிறது. அப்படி பதிவு செய்யப்பட்ட ஆதார் அட்டையை தேவைப்படும் இடங்களுக்கு அதை கையில் எடுத்து கொண்டு செல்வது என்பது ஒரு வேலையாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அந்த 12 இலக்க எண்ணை நினைவு வைக்க வேண்டியதாயிருக்கிறது.
டிஜிட்டல் இந்தியா என்று மாறிவரும் சூழலுக்கு ஏற்ப ஆதார் அட்டையும் டிஜிட்டல் வடிவில் UIDAI அமைப்பு வெளியிட உள்ளது. அதன்படி இந்தியாவின் ஆதார் அட்டை விரைவில் முக்கிய மாற்றம் பெற உள்ளது. இனி ஆதார் கார்டில் நபரின் புகைப்படமும் கியூ ஆர் கோடு மட்டும் இடம்பெறும். பெயர் முகவரி போன்ற விவரங்கள் ஏதும் அச்சிடப்படாது அடையாள சரிபார்ப்புகளுக்கு புதிய ஆதார் ஆப் பயன்படும் இதில் உள்ள கியூஆர் கோடினை காட்டினாலே போதும் அட்டை அல்லது நகல் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.