விஜய் – ராகுல் காந்தி கூட்டணி உறுதியா? கரூரில் நடந்த ‘கொலைப் பழி’ அரசியல் குறித்து ஆதவ் அர்ஜுனா பகீர்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மைப் பிரிவுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, ராகுல் காந்தி மற்றும் விஜய் இடையேயான ரகசியத் தொடர்பை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். இது வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான புதிய கூட்டணி மாற்றத்தின் அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.

விஜய்க்கு வந்த ‘அந்த’ போன் கால்!
அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் உரையாற்றிய ஆதவ் அர்ஜுனா, கடந்த செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தவெக கூட்டத்தின்போது ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவத்தைக் குறிப்பிட்டார். அப்போது, “கரூரில் அசம்பாவிதம் நடந்தபோது, ஒட்டுமொத்த ஆளுங்கட்சியும் அரசு இயந்திரமும் தலைவருக்கு (விஜய்க்கு) எதிராகத் திரும்பியது. ஆனால், அப்போது முதல் நபராகத் தொலைபேசியில் அழைத்து ஆதரவு கொடுத்தது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தான்,” என்று பகீர் தகவலை வெளியிட்டார்.

அப்போது ராகுல் காந்தி விஜய்யிடம், “சகோதரா, நான் எப்போதும் உன்னுடன் இருக்கிறேன், எதற்கும் கவலைப்படாதே” (Brother, I am always with you, don’t worry) என்று உருக்கமாகப் பேசியதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

திமுக-வின் ‘கொலைப் பழி’ திட்டம்?
ராகுல் காந்தியின் இந்த நேரடி ஆதரவைக் கண்டு திமுக தலைமை பெரும் அச்சமடைந்ததாக ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டினார். “ராகுல் காந்திக்கும் விஜய்க்கும் இடையே இருக்கும் இந்த நெருக்கம் தெரிந்தவுடன், எப்படியாவது விஜய்யை முடக்க வேண்டும் என்று திமுக துடித்தது. அதனால்தான், கரூரில் நடந்த சம்பவத்திற்கு விஜய்யே பொறுப்பு என்பது போலச் சித்தரித்து, அவர் மீது தேவையற்ற கொலைப் பழியைச் சுமத்த ஆளுங்கட்சி தரப்பு தீவிரமாக முயன்றது,” என்று அவர் சாடினார்.

காங்கிரஸ் – தவெக நெருக்கம்: திமுக-வுக்குச் சிக்கலா?
சமீபகாலமாகவே திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், தவெக மேடைகளில் தோன்றி வருவது திமுக-வுக்கு நெருக்கடியைக் கொடுத்து வருகிறது. இந்நிலையில், ராகுல் காந்தி – விஜய் இடையிலான இந்தத் தனிப்பட்ட பாசம் குறித்து ஆதவ் அர்ஜுனா பேசியிருப்பது, 2026-ல் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெக-வுடன் கைகோர்க்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
ஆதவ் அர்ஜுனாவின் இந்தப் பேச்சு, ராகுல் காந்திக்கும் விஜய்க்கும் இடையே ஒரு வலுவான ‘பாலம்’ இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. “தலைவர் ஒரு சாதாரண மனிதர் அல்ல, அவருக்குத் தேசிய அளவிலான தலைவர்களின் ஆதரவு இருக்கிறது” என்பதைத் தொண்டர்களுக்கு உணர்த்துவதற்காகவே ஆதவ் அர்ஜுனா இந்த ரகசியத்தை உடைத்ததாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Leave a Comment