தமிழ்நாட்டில் வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்த புதுப்புது முயற்சிகள் எடுத்து வரும் டி.ஆர்.பி ராஜாவின் போலி முகத்தை அம்பலப்படுத்தி உள்ளார் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை.
தமிழகத்திற்கு ஃபாக்ஸ் கான் நிறுவனம் 15 ஆயிரம் கோடிகள் முதலீடு செய்வதாக அறிவுத்துள்ளது என்று சமீபத்தில் டிஆர்பி ராஜா கூறியிருந்தார். அதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பி வந்தது. இந்நிலையில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை டிஆர்பி ராஜாவின் அம்பலங்களை புட்டு வைத்துள்ளார்.
டிஆர்பி ராஜா சொல்லி இருக்கிறார்,” பாக்ஸ் கான் நிறுவனம்15,000 கோடி முதலீடு என்று. அறைக்குள் பேசும்பொழுது தமிழக முதலமைச்சருக்கு ஆங்கிலம் தெரியாது. பாக்ஸ் கான் தலைவருக்கு தமிழ் தெரியாது. ஆனால் ராஜா அண்ணன் மக்களை நம்ப வைக்கும் விதமாக அவர்களுடன்”

”குரூப் போட்டோ எடுத்து தன்னுடைய சமூக வலைதளத்தில் ரொம்ப பெருமையாக பகிர்ந்து பத்தாயிரம் பேருக்கு வேலை 15 ஆயிரம் கோடி முதலீடு என்று அப்படி இப்படினு இஷ்டத்துக்கு அடித்துள்ளார். உண்மையில் ஃபாக்ஸ் கான் நிறுவனத்திற்கு பல பிரச்சினைகள் இருக்கிறது. ஏனென்றால் அவர்களுக்கு ஆந்திரா, மகாராஷ்டிரா, ஒரிசா போன்ற மாநிலங்களில் தங்களுடைய முதலீட்டை வைத்திருக்கின்ற ஃபாக்ஸ் கான் நிறுவனத்திற்கு அங்கிருந்து நெருக்கடி வரும்”.
”அதனால் நமக்கு எதற்கு வம்பு என்று ஃபாக்ஸ்கான் நிறுவனம் 15,000 கோடியை தமிழ்நாட்டில் முதலீடு செய்திருக்கிறோம் என்று பொய் சொல்ல மாட்டார்கள். அதேபோல அவர்கள் தரப்பிலிருந்து என்ன சொல்கிறார்கள் என்றால் தமிழக முதல்வர்கள் உடனான சந்திப்பு ஒரு வருடத்திற்கு முன்பு நாங்கள் திட்டமிட்டது. அதற்கான நேரம் கிடைத்த போது சந்தித்துள்ளோம் என்று கூறி இருக்கிறார்கள்”.
”இப்படி ஃபாக்ஸ் கான் நிறுவனம் உண்மையை பேசிய பிறகு ஆளும் தமிழக அரசின் உண்மை முகம் அம்பலப்பட்டு விட்டது. தமிழக அரசின் நிலைப்பாடு என்னவென்றால் தமிழகத்தில் யாராவது ஒரு நபர் டீக்கடை ஆரம்பித்தால் கூட இது திராவிட மாடல் என்று கூவுவார்கள். ஆனால் அண்டை மாநிலமான ஆந்திராவில் அண்ணன் சந்திரபாபு நாயுடு 15 பில்லியன் முதலீட்டில் கூகுள் ஏ ஐ டெவலப்மெண்ட் நிறுவனத்தை சத்தமே இல்லாமல் தொடங்கி இருக்கிறார்”.
”15 பில்லியன் எங்கே இருக்கிறது சோப்பு டப்பா கம்பெனி எங்கே இருக்கிறது. அதனால அண்ணன் டிஆர்பி ராஜா முதலமைச்சரை நன்றாக ஏமாத்தி வருகிறார். வெளிநாட்டில் இருந்து யாராவது ரெண்டு பேர் வந்தால் போதும் கோட் சூட் போட்டுக் கொண்டு போட்டோ எடுத்து விளம்பரம் செய்வதே இவர்களுடைய வேலையா போச்சு”. என்று அண்ணாமலை டி.ஆர்.பி ராஜாவின் உண்மை முகத்தை கிழித்து காட்டியுள்ளார்.