யுவி-யோட அந்த ’12 பால்’ மேஜிக்… உடைக்கவே முடியாதா.. 14 பந்தில் முடித்து மிரட்டிய அபிஷேக் சர்மா

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் யுவராஜ் சிங், தனது ‘சிஷ்யன்’ அபிஷேக் சர்மாவை கலாய்த்துப் போட்ட பதிவு இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நேற்று நியூசிலாந்துக்கு எதிராக நடந்த 3-வது டி20 போட்டியில், அபிஷேக் சர்மா 14 பந்துகளில் அரைசதம் அடித்து மிரட்டினார்.

யுவராஜின் அசைக்க முடியாத சாம்ராஜ்யம்!
2007-ல் யுவராஜ் சிங் அடித்த 12 பந்து அரைசதம் என்பது இன்றும் ஒரு இமாலய சாதனையாகவே இருக்கிறது. நேற்று அபிஷேக் சர்மா அடித்த 14 பந்து அரைசதம், சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு இந்திய வீரரின் இரண்டாவது அதிவேக அரைசதமாகும். வெறும் 2 பந்து வித்தியாசத்தில் யுவராஜின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை அபிஷேக் தவறவிட்டார்.

12 பந்துல அடிக்க முடியலையே!.. யுவியின் கலாய்!
அபிஷேக்கின் இந்த அதிரடியைப் பார்த்த அவரது மென்டர் (Mentor) யுவராஜ் சிங், தனது சமூக வலைதளப் பக்கத்தில்,

“இன்னமும் உன்னால 12 பந்துல அரைசதம் அடிக்க முடியலையே? நல்லா விளையாடுற.. இப்படியே தொடரு!” என்று நக்கலாகவும் அதேசமயம் பாராட்டாகவும் பதிவிட்டுள்ளார். இதற்குப் பதிலளித்த அபிஷேக் சர்மா, “யுவி பாஜியின் 12 பந்து சாதனையை முறியடிப்பது யாருக்கும் சாத்தியமில்லாத ஒன்று (Impossible). ஆனால், அதைத் துரத்துவது வேடிக்கையாக இருக்கிறது” எனப் பணிவுடன் தெரிவித்துள்ளார்.

அபிஷேக்கின் வரலாற்றுச் சாதனை:
யுவராஜின் சாதனையை முறியடிக்காவிட்டாலும், அபிஷேக் நேற்று ஒரு பெரிய சாதனையைச் செய்துள்ளார்:

0 டாட் பால்கள்:
20 பந்துகளில் 68* ரன்கள் எடுத்த அபிஷேக், ஒரு பந்தைக் கூட வீணடிக்கவில்லை (Zero Dot Balls).

அதிவேக ஓப்பனர்:
இந்திய ஓப்பனர்களில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

சூர்யகுமாரை முந்தினார்:
25 பந்துகளுக்குள் அதிக முறை (9 முறை) அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

நியூசிலாந்து வீரர்கள் அபிஷேக்கின் பேட்டில் ஏதோ ‘மேஜிக்’ இருப்பதாக நினைத்து, அவரது பேட்டை வாங்கிப் பார்த்தது மைதானத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.

Leave a Comment