ஏர் கூலர் பக்கத்துல யாரு உட்காருவது… இதுக்காப்பா கல்யாணத்தை நிறுத்தினீங்க… என்ன கொடுமை இது…

ஏர் கூலர் அருகே யார் உட்காருவது என்று சண்டை வந்து மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

திருமணம் என்பது பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு இரு மனங்கள் சேரும். ஒரு நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி திருமண நேரத்தில் அல்லது திருமண மண்டபத்தில் பல காரணங்களால் திருமணம் நடைபெறாமல் இருந்திருக்கின்றது . மணப்பெண் வேறு யாரையாவது காதலித்து அவருடன் ஓடி போவது அல்லது பிடிக்காத திருமணம் என்பதால் கடைசி நேரத்தில் திருமணத்தை வேண்டாம் என்று கூறி செல்வது என பல சம்பவங்களை நாம் பார்த்திருப்போம்.

ஆனால் உத்திரபிரதேச மாநிலம் பல்லியாவில் ஏர் கூலர் அருகில் யார் உட்காருவது என சண்டை போட்டு திருமணத்தை நிறுத்தி இருக்கிறார்கள். திருமண மண்டபத்தில் ஒரு ஏர் கூலர் இருந்திருக்கின்றது. அதற்கு அருகில் மணமகள் நான்தான் அமர்வேன் என்று கூற மணமகனும் இணை நான்தான் அமர்வேன் என்று கூறி இருக்கின்றார்.

இதனால் மணமகனுக்கும், மணப்பெண்ணுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இப்போதே சண்டை வந்தால் மாமியார் வீட்டில் என்னென்னவெல்லாம் நடக்கும் என்று கூறி மணப்பெண் திடீரென்று அந்த திருமணத்தை நிறுத்திவிட்டார். பின்னர் காவல் துறையில் புகார் தெரிவிக்க மணமகன் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது..

Leave a Comment