மிட்நைட்ல நடந்த ‘ஷாக்’ சம்பவம்.. கேள்வி கேக்கல.. கிரிமினலை தூக்குனாங்க.. ஹோட்டல் ஓனர் பகிர்ந்த அந்த மிட்நைட் த்ரில்லர்..

சென்னையில் நள்ளிரவில் பெண் ஊழியர்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைக்கு, தமிழ்நாடு போலீஸார் எடுத்த மின்னல் வேக நடவடிக்கை தற்போது சமூக வலைதளங்களில் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.

நள்ளிரவில் நடந்த பயங்கரம்:
சென்னையில் ஹோட்டல் நடத்தி வரும் மிதிலா ஜெயராஜ் என்பவர், தனது ஹோட்டல் பெண் ஊழியர்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். கடந்த வாரம் வேலை முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பிக்கொண்டிருந்த இரண்டு பெண் ஊழியர்களிடம், கட்டுமானத் தொழிலாளி ஒருவன் அநாகரீகமாக நடந்துகொண்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.

15 நிமிடத்தில் அதிரடி:
பயந்துபோன ஊழியர்கள் உடனடியாக மகளிர் ஹெல்ப் லைன் எண்ணான 181-க்கு போன் செய்துள்ளனர். “போலீஸ் வந்ததும், இந்த நேரத்துல ஏன் தனியா வந்தீங்கன்னு எங்களைக் கேலி செய்வார்களோ என்று பயந்தோம். ஆனால், அடுத்த 15 நிமிடத்தில் வந்த போலீஸார், எங்களைக் கேள்விகளால் துளைக்காமல், உடனடியாக அந்த நபரைத் தேடிப் பிடித்து ஆக்‌ஷன் எடுத்தனர்,” என மிதிலா தெரிவித்துள்ளார்.

181 ஹெல்ப் லைன் – பெண்களின் தோழன்:
சம்பவம் முடிந்து அந்த நபர் பிடிபடும் வரை, ஹெல்ப் லைன் ஊழியர்கள் தொடர்ந்து ஊழியர்களுடன் தொடர்பில் இருந்து தைரியம் கொடுத்துள்ளனர். “தமிழ்நாடு போலீஸ் நிஜமாவே மாஸ். ஆபத்து காலத்தில் பெண்கள் தயங்காமல் 181 மற்றும் 100 ஆகிய எண்களைப் பயன்படுத்துங்கள்” என மிதிலா ஜெயராஜ் நெகிழ்ச்சியுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முக்கிய அலர்ட்:
கடைசி வரை ஹெல்ப் லைன் ஊழியர்கள் போனில் தொடர்பிலேயே இருந்து தைரியம் கொடுத்தது, அந்தப் பெண்களுக்குப் பெரிய பாதுகாப்பாக இருந்துள்ளது. ஆபத்து காலத்தில் பெண்கள் 181-ஐ பயன்படுத்தத் தயங்க வேண்டாம் என்பதே இந்தச் சம்பவத்தின் ‘கிளைமாக்ஸ்’ பாடம்!

Leave a Comment