உதயநிதி ஆபத்தானவர்மிகவும் ஆபத்தானவர் – மகனைப் பற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ‘பவர்ஃபுல்’ கருத்து!

திமுகவின் இளைஞரணி வடக்கு மண்டல மாநாட்டில் பேசிய முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், தனது மகனும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகளைப் புகழ்ந்துரைத்ததோடு, அவர் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் விமர்சனங்களுக்குச் சரமாரியாக பதிலடி கொடுத்தார்.

எதிரிகள் தந்த ‘ஆபத்தானவர்’ பட்டம் :

உதயநிதி ஸ்டாலினின் தீவிரமான அரசியல் செயல்பாடுகளைக் குறிப்பிட்டுப் பேசிய மு.க. ஸ்டாலின், “தம்பி உதயநிதி தனது பொறுப்பை உணர்ந்து, இன்னும் பவர்ஃபுல்லாக செயல்படுகிறார். இன்னும் சொல்லப்போனால் இறங்கி அடிக்கிறார்” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், உதயநிதி ஸ்டாலினின் இந்த வேகமான செயல்பாடுகளால்தான் எதிரிகளுக்குப் பயம் வந்துள்ளதாகக் குறிப்பிட்டார். “கொள்கை எதிரிகள், ‘உதயநிதி மோஸ்ட் டேஞ்சரஸ்’ (Most Dangerous) என்று புலம்புகிறார்கள்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

உதயநிதி ஸ்டாலினின் கொள்கை உறுதியையும், களத்தில் அவர் ஆற்றும் உழைப்பையும் பாராட்ட மு.க. ஸ்டாலின் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

உழைப்பு, உழைப்பு, உழைப்பு:

மேலும், முன்னாள் முதல்வர் கருணாநிதி தன்னைப் பற்றி பேசும்போது, ‘உழைப்பு, உழைப்பு, உழைப்பு’ என்று கூறுவார் என்றும், அதே உழைப்பை தற்போது உதயநிதியிடமும் பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உதயநிதியை எதிரிகள் ‘ஆபத்தானவர்’ என்று விமர்சிப்பதை ஒரு பாராட்டுப் பத்திரமாகவே பார்க்கும் வகையில் மு.க. ஸ்டாலின் பேசியது, கட்சித் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment