இளையராஜா பெயர், புகைப்படங்களை பயன்படுத்த தடை!.. நீதிமன்றம் உத்தரவு….

இசைஞானி இளையராஜாவின் பெயர் புகைப்படம் மற்றும் குரல் ஆகியவற்றை வணிக நோக்கத்துடன் youtube, பேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

இசையமைப்பாளர் இளையராஜா ஏற்கனவே தனது இசையமைத்த பாடல்களை தன்னுடைய அனுமதியின்றி திரைப்படங்களில் பயன்படுத்தினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருகிறார். இந்நிலையில்தான் அவரின் தரப்பில் ஒரு புது மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தன்னை அடையாளப்படுத்தும் படி தன்னுடைய புகைப்படங்கள், பெயர், குரல், இசைஞானி பட்டம் மற்றும் குரல் என எதையும் பயன்படுத்தக் கூடாது.

ஏற்கனவே பதிவிட்ட புகைப்படங்களையும் நீக்க வேண்டும். அனுமதியின்றி தன்னுடைய புகைப்படங்களை பயன்படுத்தியதன் மூலம் கிடைத்த வருமான விபரங்களையும் யூடியுப் நிறுவனங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு இந்த விசாரணைக்கு வந்த போது இளையராஜாவின் வழக்கறிஞர் ‘இளையராஜாவின் புகைப்படத்தையும் பெயரையும் வணிகரீதியாக பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறார்கள்.. இது தனிப்பட்ட உரிமையை பாதிக்கும் செயல்.. youtube, பேஸ்புக் இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலை தினங்களிலும், ரீல்ஸ், மீம்ஸ் ஆகியவற்றிலும் இளையராஜாவின் புகைப்படத்தை தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள். அவருக்கு எதிராக அவதூறு கருத்துக்களையும் பதிவிடுகிறார்கள்’ என வாதாடினார்.

இளையராஜா தரப்பு வாதங்களைக் கேட்ட வாதங்களைக் கேட்ட நீதிபதி சமூகவலைத்தளங்களில் இளையராஜாவின் புகைப்படத்தை அனுமதி இல்லாமல் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் அவர்களின் மனுவுக்கு அளிக்கும்படி யுடியூப் நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டார்..

Leave a Comment