ஒருநாள் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை விராட் கோலி இன்றும் ரோகித் சர்மாவை விட ஒரு படி முன்னிலையில்தான் இருக்கிறார். அவர் ஒருமுறை ஃபார்முக்கு வந்துவிட்டால், அவரைத் தடுப்பது கடினம் என்று முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
சிம்மாசனத்தில் கோலி:
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 93 ரன்கள் குவித்ததன் மூலம், விராட் கோலி ஐசிசி ஒருநாள் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம் ரோகித் சர்மா மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். 37 வயதிலும் கோலி காட்டி வரும் இந்தத் தீவிரம் கிரிக்கெட் உலகையே வியக்க வைத்துள்ளது.

தனது யூடியூப் சேனலில் இது குறித்துப் பேசிய முகமது கைஃப், கோலி ஏன் ரோகித்தை விடச் சிறந்தவர் என்பதற்கான காரணங்களைப் பட்டியலிட்டார்,
“விஜய் ஹசாரே டிராபியிலிருந்து தற்போது நியூசிலாந்து தொடர் வரை கோலி அசுர ஃபார்மில் இருக்கிறார். 30 அல்லது 40 ரன்கள் எடுத்துவிட்டால், அவர் நிச்சயம் அந்தத் தொடக்கத்தைப் பெரிய ஸ்கோராக மாற்றுவார். இறுதிவரை நின்று மேட்ச்சை முடித்துக்கொடுக்கும் அந்த வித்தைதான் அவரை ரோகித்தை விட முன்னிலைப்படுத்துகிறது.”
தொடர் ஃபார்ம்:
“ரோகித் சர்மா அதிரடியாகத் தொடங்கினாலும், அவ்வப்போது விக்கெட்டைப் பறிகொடுத்து விடுகிறார். ஆனால் கோலி, ஒருநாள் கிரிக்கெட்டை டெல்லி லோக்கல் லீக் மேட்ச் ஆடுவது போல மிக மிக எளிதாக ஆடுகிறார். ஒருமுறை செட்டிலாகிவிட்டால் அவர்தான் ராஜா!”
புள்ளிவிவர மோதல்:
ஒருநாள் கிரிக்கெட்டில் கோலியின் கன்வெர்ஷன் ரேட் சுமார் 40.76% ஆக உள்ள நிலையில், ரோகித் சர்மாவினுடையது 35.10% ஆக உள்ளது என்பதையும் கைஃப் சுட்டிக்காட்டினார்.
2027 உலகக்கோப்பை வரை ஆடுவாரா? விஜய் மற்றும் ரோகித் இருவரும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், அவர்களின் முழுக் கவனமும் இப்போது ஒருநாள் கிரிக்கெட் மீதே உள்ளது. “கோலி இதே உடல் தகுதியுடன் இருந்தால் இன்னும் 5-6 ஆண்டுகள் கூட விளையாடுவார். 2027 உலகக்கோப்பை வரை அவர் ஆடுவதில் எந்தச் சந்தேகமும் இல்லை” என்று கைஃப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் நடைபெறவுள்ள நிலையில், கோலியின் இந்த அசுர ஃபார்ம் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்குப் பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.