குவைத்தில் நடந்த தீ விபத்தில் 40 இந்தியர்கள் பலி! – உதவி எண் அறிவிப்பு..

குவைத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த தீ விபத்தில் பலரும் பலியானதை தொடர்ந்து உதவி தொலைப்பேசி எண் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தெற்கு குவைத்தில் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஆபிரஹாம் என்பவருக்கு சொந்தமக ஒரு அடுக்குமாடி கட்டிடடத்தில் தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து வேலைக்கு போன பலரும் தங்கி இருக்கிறார்கள். இங்கு தங்கியபடி அவர்கள் குவைத்தில் வேலை செய்து வருகிறார்கள்.

இந்த கட்டிடத்தில்தான் இன்று காலை 6 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. உடனே தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து அடுக்குமாடி குடியிருப்பில் பரவிய தீயை அணைக்க முயன்றனர்.

ஆனாலும், இந்த கோர விபத்தில் தமிழர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் உடல் கருகி உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இது முதல் கட்ட தகவல்தான் என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்கிற பீதியும் ஏற்பட்டிருக்கிறது. பிரதமர் மோடி இந்த சோக சம்பவத்திற்கு தனது இரங்கலை தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் +965 – 65505246 என்கிற அவசர எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவித்திருக்கிறது. மேலும், இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கிர்த்தி வர்தன் சிங் குவைத் சென்றிருக்கிறார்.

Leave a Comment