இணைதளத்தில் சுமார் 21,000 திரைப்படங்களை லீக் செய்த ஆசாமி தற்போது போலீசில் பிடிபட்டுள்ளார். அது மட்டும் இல்லாமல் தான் ஏன் இவ்வாறு செய்தேன் என்ற காரணத்தை போலீஸிடம் வாக்குமூலமாக கொடுத்துள்ளார்.
இந்தியாவில் பாலிவுட் திரைப்படங்களுக்கு பிறகு தமிழ் திரைப்படங்கள் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்கள் பிரமாண்ட வசூல் கொடுத்து பாலிவுட்டுக்கு இணையான அந்தஸ்தை பெற்றது. மொத்தத்தில் இந்திய சினிமாவே ஹாலிவுட் ரேஞ்சுக்கு பிரம்மாண்டமாக மாறிவிட்டது.

இந்நிலையில் இப்படி கோடிக்கணக்கில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் வெளியான அன்றே இணையதளத்தில் வெளியாகி தயாரிப்பாளரின் தலையில் துண்டை போட வைத்துள்ளனர் சிலர். இப்படி சட்டத்திற்கு விரோதமாக திரைப்படத்தை இணையதளங்களில் பதிவேற்றம் செய்வது நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது.
இதில் ரவி என்பவர் ஐபோமா வெப்சைட் ஒன்றை நடத்தி வருகிறார். இதன் மூலம் இந்திய மொழியில் உள்ள அனைத்து திரைப்படங்களும் இவரது இணையதளத்தில் இல்லிகளாக பதிவேற்றும் செய்து வந்தார். மொத்தம் 21 ஆயிரம் திரைப்படங்கள் சட்டவிரோதமாக டவுன்லோடு செய்யப்பட்டு இவர் தன்னுடைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வைத்துள்ளார்.
இதன் மூலம் சுமார் 20 கோடி வரை கல்லா கட்டியுள்ளார். கரீபியன் நாட்டில் குடியுரிமை பெற்ற ரவி அங்கேயே வசித்து வந்தார். வெளிநாட்டில் பதுங்கி இருந்ததால் இவரை பிடிக்க முடியாமல் இருந்தது. சமீபத்தில் ஹைதராபாத்தில் இவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பை விற்பனை செய்வதற்காக வந்துள்ளார்.
இதை அறிந்த தெலுங்கானா போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில் தனது ஹார்ட் டிஸ்கில் 21,000 படங்களை வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஆன்லைன் கேமிங் முறையிலும் மோசடி செய்யப்பட்டு பணம் சம்பாதித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணையில் கூறிய ரவி கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணமான நிலையில் அவருக்குப் போதிய வருமானம் இல்லாமல் இருந்தது. குடும்ப செலவுக்கு பணம் இல்லாமல் இருந்ததால் அவரது மனைவி மற்றும் மாமியாராலால் மிகவும் அவமானப்படுத்தப்பட்டு, மனைவி விவாகரத்தும் பெற்று சென்றுள்ளார். இதனால் மிகுந்த மன அழுத்தம் ஏற்பட்டு எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து சினிமா துறையில் கவனம் செலுத்தியுள்ளார்.
அதனால் திரைப்படங்களை திருட்டுத்தனமாக டவுன்லோட் செய்து தனது வெப்சைட்டில் பதிவேற்றம் செய்துள்ளார். லட்சங்களில் வருமானம் என்று நினைத்த ரவிக்கு விளம்பரங்களின் மூலம் கோடிகளில் வருமானம் வந்துள்ளது. அதில் ருசி கண்ட ரவி தொடர்ந்து இந்த மாதிரியான வேலையை செய்து வந்துள்ளார்.
தற்போது போலீசில் சிக்கிய ரவி Ibomma வெப்சைட்டை அவரது கையாலே போலீஸ் முடக்கியுள்ளது. மேலும் அவரை சிறையிலும் அடைத்துள்ளனர். இதற்கு சிரஞ்சீவி, ராஜமௌலி போன்ற முன்னணி திரை பிரபலங்களும் தெலுங்கானா போலீசாருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.