கனமழை எச்சரிக்கை.. மையம் கொண்ட புயல்.. வானிலை மையம் அறிவிப்பு

அடுத்த 24 மணி நேரத்தில், தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள இலட்சத்தீவு பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக போகிறது, என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு திசையில் இருந்து வடமேற்கு திசைக்கு மெதுவாக நகரக்கூடும் எனவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதனால் வருகிற-22 ஆம் தேதி தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும். இது கொஞ்சம் கொஞ்சமாக வடமேற்கு திசைக்கு நகர்ந்து வருகிற 24-ஆம் தேதியில் தெற்கு வங்க கடலில் மையப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெறும்.

இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மாலை 4 மணிக்கு மேல் தமிழகத்தில் சென்னை,காஞ்சிபுரம்,தென்காசி மற்றும் திருவாரூர் ஆகிய இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதலால் இந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Leave a Comment