பாகிஸ்தானுக்கு No.. இலங்கைக்கு விமானம்!.. பரவிய வதந்தி.. மத்திய அரசு விளக்கம்!….

புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்ல பாகிஸ்தான் விமானத்துக்கு இந்தியா தனது வான்வெளியைப் பயன்படுத்த அனுமதி மறுத்ததாகப் பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியான செய்தியை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்தியா தனது வான்பரப்பைப் பயன்படுத்த பாகிஸ்தானுக்கு உடனடியாக அனுமதி வழங்கியதாகவும், அதற்குப் பின்னரும், பாகிஸ்தான் ஊடகங்களில் தவறான தகவல் பரப்பப்படுவதாகவும் இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியான, ‘இந்தியா அனுமதி மறுத்தது’ என்ற செய்தி முற்றிலும் பொய்யானது என்றும், இது போன்ற தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் மத்திய அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு, பிராந்தியத்தில் நிவாரணப் பணிகளுக்கு உதவுவதில் இந்தியா கடைப்பிடிக்கும் உடனடி மற்றும் இணக்கமான நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

Leave a Comment