டைம் வந்தாச்சு.. திமுக-வுக்கு டாட்டா சொல்லுங்க!.. தமிழகத்தில் மோடி ஊதிய ‘தேர்தல்’ சங்கு!

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) முக்கியத் தலைவராகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகத்தில் பிரம்மாண்ட பிரச்சாரத்தைத் தொடங்கினார். அப்போது திமுக அரசுக்கு எதிராக அவர் முன்வைத்த விமர்சனங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளன.

தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது:
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்பதைத் தமிழகத்தின் ஒவ்வொரு மூலையிலும் என்னால் உணர முடிகிறது. தமிழ்நாடு இப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பக்கம் உறுதியாக நிற்கிறது” எனத் தெரிவித்தார்.

மக்களின் மனதில் NDA:
கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு செய்துள்ள சாதனைகளை மக்கள் மறக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், “மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சாதனைகள் தமிழக மக்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அந்த நம்பிக்கையே வரும் தேர்தலில் எதிரொலிக்கும்” என நம்பிக்கையோடு பேசினார்.

2026 தேர்தல் களம்:
தமிழகத்தில் திமுக – பாஜக இடையே நேரடி மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், “காலம் வந்துவிட்டது” என்ற மோடியின் இந்த வார்த்தைகள் பாஜக தொண்டர்களுக்குப் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளன. ஊழல் மற்றும் குடும்ப அரசியலுக்கு எதிராகத் தமிழக மக்கள் இந்த முறை வாக்களிப்பார்கள் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு எதிராகச் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே பிரதமரின் இந்தப் பேச்சு பார்க்கப்படுகிறது.

Leave a Comment