தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி கோவை கொடிசியா மைதானத்தில் இன்று தொடங்கி வைத்தார். முன்னதாக ஆந்திராவின் புட்டபர்த்தியில் நடைபெற்றும் வரும் சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட மோடி, அங்கிருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தார்.
கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் சாமிநாதன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி, தமாகா தலைவர் ஜிகே வாசன், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏசி சண்முகம், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், அண்ணாமலை உள்ளிட்டோரும் வரவேற்றனர்.
விழாவில் கந்துகொண்டு பேசிய பிரதமர், எனக்கு சிறு வயதிலேயே தமிழ் சொல்லித் தரப்பட்டிருந்தால் உங்களுடன் தமிழில் பேசி மகிழ்ந்திருப்பேன்.பி.ஆர். பாண்டியன் பேச்சு அருமையாக இருந்தது. தமிழ் புரியாவிட்டாலும் அவரது உணர்வுகள் புரிய வைத்தது. பி.ஆர்.பாண்டியனி உரையை எனக்கு இந்தியில் அனுப்புங்கள் என்று கூறினார்.