முதல் இந்திய வீராங்கனையாக மாஸ் சாதனை!.. இந்தோனேசிய மண்ணில் பிவி சிந்து ஆடிய அதிரடி ஆட்டம்..

இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து, சர்வதேச அரங்கில் தனது 500-வது வெற்றியைப் பதிவு செய்து புதிய வரலாறு படைத்துள்ளார். இதன் மூலம் மகளிர் ஒற்றையர் பிரிவில் 500 வெற்றிகளைப் பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

வரலாற்று வெற்றி எப்படி?
இந்தோனேசியா மாஸ்டர்ஸ் சூப்பர் 500 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில், டென்மார்க்கின் லைன் ஹோஜ்மார்க் க்ஜேர்ஸ்ஃபெல்ட் உடன் சிந்து மோதினார்.

அதிரடி ஆட்டம்:
ஆரம்பம் முதலே நிதானமாகவும் ஆக்ரோஷமாகவும் ஆடிய சிந்து, 21-19, 21-18 என்ற நேர் செட்களில் வெற்றியைத் தட்டிப்பறித்தார். இந்த வெற்றியின் மூலம் லைன் ஹோஜ்மார்க்கிற்கு எதிரான தனது வெற்றிக் கணக்கை 6-1 என சிந்து உயர்த்தியுள்ளார். 43 நிமிடங்களில் இந்தப் போட்டியை சிந்து முடிவுக்குக் கொண்டுவந்தார்.

எலைட் கிளப்பில் இணைந்த சிந்து:
உலக அளவில் மகளிர் ஒற்றையர் பிரிவில் 500 வெற்றிகளைக் கடந்த 6-வது வீராங்கனை என்ற சிறப்பையும் சிந்து தற்போது பெற்றுள்ளார்.

“எனது கேரியரில் 500 வெற்றிகள் என்பது ஒரு மைல்கல் மட்டுமல்ல, எனது உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம்” என சிந்து நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அடுத்த சவால் என்ன?
காலிறுதிக்கு முன்னேறியுள்ள பிவி சிந்து, அடுத்ததாக உலகின் 4-ம் நிலை வீராங்கனையும், டோக்கியோ ஒலிம்பிக் தங்கப்பதக்க வெற்றியாளருமான சீனாவின் சென் யூ பீ (Chen Yu Fei) உடன் மோதவுள்ளார். இருவருக்கும் இடையிலான நேருக்கு நேர் மோதலில் சென் யூ பீ 7-6 என முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதே தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென், ஹாங்காங்கின் ஜேசன் குணவானை 21-10, 21-11 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

Leave a Comment