சுமார் 150 கோடி மக்கள் வசிக்கும் இந்திய நாட்டில் மொழி மற்றும் கலாசாரப் பன்முகத்தன்மையின் முக்கியத்துவம் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வெளியிட்டுள்ள கருத்துகள் இந்திய அளவில் கவனம் பெற்றுள்ளன.
புதினின் திடீர் கருத்து:
“சுமார் 150 கோடி மக்கள் வசிக்கும் இந்திய நாட்டில், 50 முதல் 60 கோடி மக்களைத் தவிர பிறர் வெவ்வேறு மொழிகள் பேசுகின்றனர்,” என்று புதின் கூறியுள்ளார். “இந்த ஒற்றுமையும் பன்முக தன்மையும் பாதுகாப்பது அவசியம்,” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உள்நாட்டு அரசியலில் அதிர்வலை:
சர்வதேச அளவில் இந்தியாவின் நெருங்கிய கூட்டாளியான ரஷ்யாவின் அதிபர், இந்தியாவின் மொழிப் பன்முகத்தன்மை குறித்துப் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் இந்தி மொழித் திணிப்பு குறித்த விவாதங்கள் அவ்வப்போது எழுந்துவரும் நிலையில், புதினின் இந்தக் கருத்துகள், இந்தியாவின் மொழிவழி மாநிலங்களின் அரசியல் கட்சிகளுக்கு கூடுதல் வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. பன்முகத்தன்மையை வலியுறுத்துவதன் மூலம், புதின் இந்தியாவுடனான உறவில் கலாச்சாரப் புரிதலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
எதிர்கால இந்தியா வலுவாக இருக்க வேண்டுமானால், அதன் பன்முக மொழிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற சர்வதேசக் குரலாக புதினின் பேச்சு அமைந்துள்ளது.