நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக எதிர்பார்க்கப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள வசனங்கள் மற்றும் காட்சிகளை முன்வைத்து, நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
“திரும்பிப் போற ஐடியாவே இல்ல…” – கரூருக்கா? பனையூருக்கா?
ட்ரெய்லரில் விஜய் பேசும் “திரும்பிப் போற ஐடியாவே இல்ல” என்ற வசனத்தை கிண்டல் செய்த சாட்டை துரைமுருகன், “எங்க கரூருக்கா திரும்பிப் போக மாட்டீங்க? அங்கதான் அடிவாங்கிட்டு ஓடிட்டீங்களே! இப்ப என்னடான்னா படத்துல இதையே வசனமா வச்சிருக்காரு. அந்த வினோத் (இயக்குநர்) பெரிய குசும்புக்காரன், இவரோட பொருளை (அரசியல்) எடுத்து இவருக்கே ஆப்பு அடிச்சுட்டாரு,” என்று விமர்சித்தார்.
மேலும், “I am coming” என்ற பஞ்ச் வசனத்திற்கு, “எங்கே வரப்போறீங்க? கரூருக்கா? இல்ல தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்துற இடத்துக்கா? இல்ல கவின் படுகொலை நடந்த இடத்துக்கா? எங்கயும் போக மாட்டாரு, பனையூர்ல சிட்டிங் தான்!” என கலாய்த்து தள்ளிவிட்டார்.
அணில் 65-ல் விழுந்த அடி:
விஜய்யின் அரசியல் செயல்பாடுகளை விமர்சித்த அவர், “சினிமா வேற அரசியல் வேறன்னு தெரியாம அரசியல்ல அடி வாங்குனதை இப்ப சினிமாவுல புலம்பிக்கிட்டு இருக்காரு. ‘காலி பண்ணிரலாம், அசிங்கப்படுத்தலாம்-னு நினைச்சீங்கன்னா.. ஐ அம் கம்மிங்’னு பேசுறாரு. ஆனா நிஜத்துல விஜய்க்கு உள்ளுக்குள்ள பயம் இருக்கு. ‘அணில் 65’ போட்ட அடியில விஜய் கதறிட்டாரு, அவரை அசிங்கப்படுத்தியாச்சு,” என்று அதிரடியாகத் தெரிவித்தார்.
சாணி கமெண்ட்:
ட்ரெய்லரில் வரும் ஒரு காட்சியில் இரண்டு யானைகளுக்கு நடுவே விஜய் நடந்து வருவதைப் பற்றிப் பேசிய சாட்டை துரைமுருகன், தனது பாணியில் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை முன்வைத்தார்,
“காட்டுக்குள்ள ரெண்டு யானைக்கு நடுவே விஜய் வர்றாரு. இது நிஜமாவே நடந்தா, அங்க யானை சாணி இருக்காது, விஜய்யோட சாணி தான் இருக்கும். ஜன நாயகன் படத்தின் ட்ரெய்லரா? தவெக ப்ரோமோஷனா? பொதுவாக விஜய் படங்கள் பொழுதுபோக்கிற்காக இருக்கும், ஆனால் இந்த ட்ரெய்லர் முழுக்க முழுக்க தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) விளம்பரப் படம் போலவே இருப்பதாக சாட்டை குற்றம் சாட்டினார். நிஜ வாழ்க்கையில் மக்கள் பிரச்சனைகளுக்காகக் களமிறங்காத விஜய், சினிமாவில் மட்டும் வசனம் பேசுவதாகவும் அவர் சாடினார்.
சாட்டை துரைமுருகனின் இந்த ‘சாட்டை’ அடி போன்ற விமர்சனம், சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்களுக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே பெரும் போர் மூளக் காரணமாகியுள்ளது.