அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் தனது எம்எல்ஏ பதவியை இன்று ராஜினாமா செய்தார். உடனே இன்று மாலை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். செங்கோட்டையன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததற்கு காரணம் தமிழக வெற்றி கழகத்தில் இணையத்தான் என்று அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் பரவி வந்தன.

இன்று விஜய் சந்தித்தது அந்த தகவலை உறுதி செய்தது போல் இருக்கிறது. இந்நிலையில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் செங்கோட்டையன் அரசியல் நிலையை பற்றி விமர்சித்துள்ளார் அதில், அதிமுக கட்சியில் இருந்து முக்கிய பிரமுகரை நம் கட்சியில் இணைத்துக் கொண்டால் கொங்கு மண்டலமே நம் கட்டுப்பாட்டில் வந்துவிடும் என்று விஜய் நினைத்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் செங்கோட்டையனுக்கு விழும் வாக்குகளுக்கு காரணம் அவர் அதிமுககாரர் என்பதால்தான். சிலர் என்னிடம் தமிழக முதல்வர் ஸ்டாலினே செங்கோட்டையனை தன் கட்சியில் சேர்த்துக்கொள்ள அழைப்பு விடுத்ததாக கூறுகிறார்கள். ஆனால் செங்கோட்டையன் மறுத்துவிட்டார். ஆனால் அப்படிப்பட்டவர் தவெகவில் சேர்வது உண்மையில் எனக்கு சந்தேகமாக இருக்கிறது.
திமுகவில் சேர்ந்தால் அது வேற, ஏனென்றால் ஸ்டாலின் இவரை விட வயதில் பெரியவர். அவரை வாழ்க, வளர்க என கோஷமிடுவதில் அவருக்கு எந்த சிக்கலும், தயக்கமும் இருக்காது. ஆனால் 80 வயதில் செங்கோட்டையன் விஜய் வாழ்க என்று மேடையில் கத்துவது நினைத்துப் பார்த்தாலே சிரிப்பாக வருகிறது. இவர் வயதிற்கு அந்த கட்சியில் யாராவது இருக்கிறார்களா ?
விஜயை போலவே மேடையில் செங்கோட்டையினும் ”பிளாஸ்ட்டு பிளாஸ்ட்டு” என்று பேசினால் எப்படி இருக்கும். இதற்கு பதில் அவர் அரசியலை விட்டு விலகுவது உத்தமமாக இருக்கும். ஆனால் இந்த வயதில் விஜய் வாழ்க, நிர்மல் குமார் வாழ்க, ஆதவ் அர்ஜுனா வாழ்க, புசி ஆனந்த் வாழ்க அப்படின்னு சொன்னா இவ்வளவு கன்றாவியா இருக்கும். என்று சவுக்கு சங்கர் விமர்சித்துள்ளார்.




