கூவத்தூரில் இருந்து பனையூருக்கு அதிகாரப்பூர்வமாக அடைக்கலமான செங்கோட்டையன்..

அதிமுகவின் மூத்த நிர்வாகி முன்னாள் எம்எல்ஏ செங்கோட்டையன் 1977 ஆம் ஆண்டு முதல் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அந்தக் கட்சியில் இருந்து வருகிறார். இதுவரை அவர் ஒன்பது முறை கொங்கு மண்டலத்தில் எம்எல்ஏவாக இருந்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சியில், கட்சி யாருக்கு என்பதில் உள்கட்சி மோதல் ஏற்பட்டது.

இதனை அடுத்து கட்சி எடப்பாடி கைக்கு வந்த பின்பு செங்கோட்டையனுக்கும் எடப்பாடிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் பூதாகரமாக வெடித்து செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். இவர்கள் இருவரும் இணைய வேண்டும் கட்சி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் எவ்வளவு முயற்சி செய்தும் எதுவும் எடுபடவில்லை.

நேற்றைய தினம் சபாநாயகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். மேலும் அவருடைய ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் தவெக குறித்த கேள்வி எழுப்பியதற்கு, “இன்னும் ஒரு நாள் பொறுங்கள்” என்று கூறிவிட்டு சென்றார்.

நேற்று மாலை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் வீட்டில் அவரை சந்தித்துள்ளார் செங்கோட்டையன். மேலும் விஜய்யுடன் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் இவர்களும் உடன் இருந்தனர். சுமார் 2 மணி நேரம் இந்த ஆலோசனை நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை 10 மணி அளவில் செங்கோட்டையன் அதிகாரப்பூர்வமாக தவெக கட்சியில் இணைந்தார்.

கட்சியில் இணைந்த செங்கோட்டையனுக்க நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் என்ற மிக முக்கிய பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களுக்கான அமைப்பு பொதுச் செயலாளராகவும் செங்கோட்டையன் நியமனம் செய்யப்பட்டள்ளார்.

ஒருமுறை கூட தேர்தலை சந்திக்காத விஜய், ஒன்பது முறை எம்எல்ஏவாக இருந்து செங்கோட்டையன் இருப்பது தவெக கட்சிக்கு பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது. இதுவரை அரசியல் அனுபவம் இல்லாத சீனியர்கள் இல்லாத கட்சி என்று விமர்சித்தவர்களுக்கு செங்கோட்டையன் வரவு அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருக்கும். மேலும் விஜய்க்கும் இது பெரிய பலமாக இருக்கும்.

கூடிய விரைவில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தவெக-வில் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment