திமுகவை மட்டுமல்ல 5000 கொடுத்தால் தன்னைத்தானே திட்டுவார் நாஞ்சில் சம்பத்.. புரட்டி எடுத்த சாட்டை துரைமுருகன்

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அண்மையில் இணைந்திருக்கும் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், விரைவில் அக்கட்சியில் இருந்து வெளியேறி, வெளியேறும் போது விஜய்யின் அணுகுமுறை குறித்து விமர்சனம் செய்வார் என்று நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர் சாட்டை துரைமுருகன் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நாஞ்சில் சம்பத் தவெக-விலிருந்து வெளியேறும் பட்சத்தில் பத்திரிகையாளர்களிடம் அவர் வைக்கப்போகும் விமர்சனத்தை இப்போதே சாட்டை துரைமுருகன் கணித்துக் கூறியுள்ளார்.

“நாஞ்சில் சம்பத் வெளியே வந்தால், ‘விஜய்யை பார்த்தாதானே.. அவர கடைசியாகப் பார்த்தது நான் கட்சியில் சேரும்போதுதான். அவர் வீட்டுக்குள் ஆம்பளைகளுக்கே அனுமதி கிடையாது. ஆதவ் அர்ஜுனாவுக்கும், புஸ்ஸி ஆனந்துக்கும்தான் அனுமதி’ என்று சொல்லுவார்” என்று சாட்டை துரைமுருகன் சாடியுள்ளார்.

“சமீபத்தில் கூட விஜய், ‘எஸ் ஐ ஆர் (Sir) பற்றி ஏன் கருத்து சொல்லணும்? அவர் வெளியேவே வர மாட்டாரே’ என்று நாஞ்சில் சம்பத் சொன்னார்” என்பதையும் அவர் நினைவுபடுத்தினார்.

நாஞ்சில் சம்பத்தின் மீதான கடும் சொற்கள்:

நாஞ்சில் சம்பத்தின் அரசியல் பயணத்தைக் கடுமையாக விமர்சித்த சாட்டை துரைமுருகன், அவரை ஒரு தரங்கெட்ட பேர்வழியாகச் சித்தரித்தார். நாஞ்சில் சம்பத் என்பவன் ஒரு தற்குறி, தரங்கெட்ட பேர்வழி. வண்டியை வாடகைக்கு விட்டு கேள்விப்பட்டிருக்கீங்க.. வாயை வாடகைக்கு விட்டு பிழைப்பவர்தான் இந்த நாஞ்சில் சம்பத்” என்று கடுமையாகச் சாடினார்.

நாஞ்சில் சம்பத் எந்தக் கட்சிக்கும் உண்மையாக இருந்ததில்லை என்று குற்றம் சாட்டிய அவர், “ஒரு ₹5000 அவரிடம் கொடுத்தால், அவர் திமுகவைத் திட்டி மட்டுமல்ல, தன்னையே திட்டி கொள்வார். இன்னும் ரூ.2000 சேர்த்து கொடுத்தால் உச்சத்துக்கு சென்று தன்னையே கலாய்த்து கொள்வார்” என்று கூறியுள்ளார்.

திராவிட இயக்கத்தின் சிறந்த பேச்சாளராக அறியப்பட்ட நாஞ்சில் சம்பத், மதிமுக, அதிமுக, அமமுக எனப் பல கட்சிகளில் பயணித்து, கடந்த டிசம்பர் 5-ஆம் தேதிதான் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அவர் இணைந்த ஒரு சில நாட்களிலேயே, நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளரான சாட்டை துரைமுருகன் இந்தக் கடும் விமர்சனத்தை முன்வைத்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Leave a Comment