தங்கம் விலையின் மெகா ஜம்ப்!.. ஒரு சவரன் ₹1,00,000-ஐ கடந்தது!..

வரலாறு காணாத உச்சம் – ஒரு சவரன் ₹1,01,020-ஐ கடந்தது!

தொடர்ந்து ஏற்றம் கண்டுவந்த ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று (டிசம்பர் 15) வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டு, ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்படுவது, பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விலை உயர்வு விவரம் :

சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் இந்திய ரூபாய் மதிப்பின் பலவீனம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இன்று காலை முதல் தங்கத்தின் விலையில் அதிரடியான உயர்வு காணப்பட்டது.

இன்று காலை நிலவரப்படி, ஒரு சவரனுக்கு ₹720 உயர்ந்து தங்கம் விலை விற்பனையானது. பிற்பகலில் மீண்டும் ஒருமுறை ₹440 உயர்ந்து, மொத்தமாக ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ₹1,160 உயர்ந்துள்ளது. இந்த அதிரடி உயர்வால், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை விவரம் ஒரு சவரன் (8 கிராம்)₹1,01,020, எனவும், ஒரு கிராம் ₹12,627.50) என தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம் அடைந்துள்ளது.

தங்கம் விலை ஒரு லட்ச ரூபாயைத் தாண்டி விற்பனையாவது இதுவே முதல் முறை என்பதால், இது வரலாறு காணாத சாதனையாகப் பார்க்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பு முதலீடாகத் தங்கத்தில் அதிக ஆர்வம் காட்டுவதும், சர்வதேச பொருளாதார மந்தநிலையும் இந்த விலையேற்றத்திற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. நகை வாங்கத் திட்டமிட்டிருந்த சாதாரண மக்கள் இந்த விலை உயர்வால் பெரும் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Leave a Comment