அதிமுகவும், திமுகவும் புதிதாக யாரும் வந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். ஒன்று நீ கொள்ளையடி அல்லது நான் கொள்ளை அடிக்கிறேன்.. அதை தடுப்பது போல வேறு ஒருவன் உள்ளே வரக்கூடாது என நினைக்கிறார்கள். நீ SOP போட்டு விஜயை முடக்கு.. நான் அவன் மீது பழிகளை சுமத்தி முடக்க பார்க்கிறேன்’ என டீலிங் போடுகிறார்கள். இவர்களுக்கு மக்களின் ஃபீலிங் முக்கியமில்லை.. டீலிங்தான் முக்கியம்.. ஏனெனில், நம்மால் மட்டும்தான் மக்களை ஏமாற்ற முடியும் என இவர்கள் நினைக்கிறார்கள்..
விஜய் வந்தால் நமது பிழைப்பு போய்விடும்.. இனிமேல் கொள்ளை அடிக்க முடியாது என இவர்கள் நினைக்கிறார்கள்.. முதல்வர் ஸ்டாலின் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும்.. ஸ்டாலின் சார் என்ன நினைக்கிறார் என சொல்லட்டுமா?.. நான் பாட்டுக்கு ஜாலியாக சைக்கிளில் பைபாஸில் சிங்கிளாக போய்க் கொண்டிருந்தேன். விஜய் மக்கள் சக்தியுடன் முன்னே வருகிறான்.. இவனை மக்கள் நம்புகிறார்கள்.. இவன் கேள்வி கேட்பது மட்டுமில்லாமல் அவனுடைய சேர்ந்து மக்களும் கேள்வி கேட்கிறார்கள் என்று புலம்புகிறார்..

விஜயை நீங்கள் முடக்கலாம்.. ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் விஜயை எப்படி முடக்குவீர்கள்?.. மக்கள் கேள்வி கேட்க துவங்கி விட்டார்கள்.. உங்களால் இனிமேல் ஏமாற்ற முடியாது.. நீங்கள் மீண்டும் ஆட்சிக்கு வர மாட்டீர்கள்.. திமுக தொடர்ந்து இரண்டு முறை ஆட்சிக்கு வந்தது இல்லை.. ஸ்டாலின் சாரின் அப்பாவாவால் கூட அது முடியவில்லை..
மாநில அரசால் நீட்டை ஒழிக்க முடியாது என தெரிந்தும் திமுக பொய்யான வாக்குறுதியை கொடுத்து மக்களை ஏமாற்றியது.. திமுக ஒரு மோசடி அரசு.. மோசமானவர்களின் முக்கியமானவர் என சொல்வார்களே அப்படி மோசடியான ஆட்சிக்கு முன்னுதாரணமாக திமுக இருக்கிறது. எதையாவது சொல்லி பொய்யான வாக்குகளை கொடுத்து மக்களை ஏமாற்றுவதையே வேலையாக வைத்திருக்கிறார்கள்..
தமிழகத்தில் நிலத்தடி நீர் இனிமேல் இருக்காது என அறிக்கைகள் வெளியானது.. மணல் கொள்ளைதான் அதற்கு காரணம். இது திமுகவுக்கு தெரியாதா?.. தெரிந்தும் கண்டு காணாமல் போல் இருக்கிறது திமுக.. மணல் கொள்ளையில்தான் அவர்களுக்கு கமிஷன் வருகிறதே.. எப்படி தடுப்பார்கள்?’
ஆவேசமாக விஜய் பேசினார்