Connect with us

latest news

ரூ.210 முதலீடு போதும்… மாதம் மாதம் 5000 பென்ஷன் வரும்… அசத்தலான திட்டம்…!

Published

on

மாதம் 5000 பென்சன் கிடைக்கக்கூடிய மாதாந்திர ஓய்வூதிய திட்டம் குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

தொழிலாளர்கள் மற்றும் பொருளாதரத்தில் மிகவும் நலிவடைந்த தனி நபர்களுக்காக மாதாந்திர ஓய்வூதிய திட்டமாக அடல் பென்ஷன் யோஜனா திட்டம் செயல்பட்டு வருகின்றது. கடந்த 2015-16 ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது இது திட்டம் அடல் பென்ஷன் யோஜனாவில் குறைந்த முதலீட்டின் மூலம் ஒவ்வொரு மாதமும் 5000 வரை ஓய்வூதியமாக பெற முடியும். இந்த திட்டம் குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

மத்திய மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகம் செய்து பொதுமக்களின் நலனுக்காக செயல்படுத்தி வருகிறார்கள். அப்படி மத்திய அரசால் தொடங்கப்பட்ட திட்டம் தான் அடல் பென்ஷன் யோஜனா திட்டம். இதன் மூலம் இதுவரைக்கும் 7 கோடிக்கும் அதிகமான நபர்கள் பயனடைந்து இருக்கிறார்கள்.

அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் மூலம் பலன்களை பெறுவதற்கு பயனாளர்கள் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவராக இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ஒருவர் தினமும் 7 ரூபாய் வீதம் மாதத்திற்கு 210 டெபாசிட் செய்ய முடியும். ஒவ்வொரு மாதமும் டெபாசிட் செய்யும்போது 60 வயதை அடைந்ததும் உங்களுக்கு 5000 ரூபாய் ஓய்வூதியமாக கிடைக்கும்.

அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் ஒருவர் செலுத்தும் பிரிமியத்தை பொறுத்து பென்ஷன் தொகையை மாற்றிக் கொள்ள முடியும். 3 மாதங்களுக்கு ஒருமுறை ரூ. 626 செலுத்தினால் மாதந்தோறும் 5000 ரூபாய் பெறலாம். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை 1239 ரூபாய் செலுத்தினாலும் மாதந்தோறும் 5000 ரூபாய் உங்களுக்கு ஓய்வூதியமாக கிடைக்கும்.

18 வயதிலிருந்து ஒவ்வொரு மாதமும் நீங்கள் 42 ரூபாய் செலுத்தும் போது மாதம் 1000 ரூபாயை நீங்கள் ஓய்வூதியமாக பெறலாம். ஒருவேளை அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் முதலீட்டாளர்கள் இறந்துவிட்டால் அவரின் வாழ்க்கை துணை இந்த பென்சனை பெற முடியும். இருவரும் இறந்துவிட்டால் சந்தாதாரரின் நாமினிக்கு இந்த பென்ஷன் தொகை சென்றடையும்.

இதில் அதிக தொகை கட்டும் போது நமக்கு பென்ஷன் தொகையும் அதிகமாக கிடைக்கும். அடல் பென்ஷன் யோஜனாவில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து டெபாசிட் செய்ய முடியும். 60 வருடங்களுக்கு பிறகு இந்த திட்டத்தின் பலனை முதலீட்டாளர்கள் பெறலாம். பொதுத்துறை, தனியார் வங்கிகள், தபால் அலுவலகங்களில் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தை நம்மால் துவங்க முடியும். இதன் மூலம் ஓய்வு காலத்தை நிம்மதியாக வாழலாம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

google news