insurance news
மாதம் 18,500 வரை பென்ஷன் வேனுமா?.. அப்போ இத கொஞ்சம் பாருங்க..
வயதானவர்களுக்கு அவர்கலின் ஓய்வு காலத்தில் மாதாந்தோறும் ஓய்வூதியம் பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் நமது அரசினால் கொண்டுவரப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட வரிசையில் மாதந்தோறும் பென்ஷன் வரும் வகையில் உருவாக்கப்பட்ட திட்டங்களில் ஒன்றான பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா(PMVVY) என்ற திட்டத்தினை பற்றி பார்ப்போம்.
இத்திட்டம் வயதானவர்களுக்கென கொண்டு வரப்பட்ட திட்டம் ஆகும். இதில் சேருவதற்கு நாம் 60 வயதினை பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். இத்திட்டத்தின் மொத்த காலம் 10 ஆண்டுகள். இத்திட்டத்தில் கிடைக்கும் ஓய்வூதிய தொகையை நாம் மாதம், காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடத்திற்கு ஒரு முறை என நமக்கு விருப்பமான காலங்களில் கிடைக்கும் படி விண்ணப்பித்து கொள்ளலாம். இத்திட்டத்தினை நாம் லைஃப் இன்ச்ஸூரன்ஸ் கார்பொரேஷனிற்கு சென்று விண்ணப்பித்து கொள்ளலாம். இதனை விண்ணப்பிக்க நாம் நமது ஆதார் மற்றும் பேன்(PAN) கார்டினை கொண்டு செல்ல வேண்டும்.
இந்த திட்டத்தின்படி நாம் நமக்கு எவ்வளவு ஓய்வூதியம் வேண்டுமோஅதற்கேற்றார் போல் பெரிய தொகையை முன்கூட்டியெ செலுத்த வேண்டும். உதாரணமாக நமக்கு 1000 ரூபாய் பென்ஷன் வேண்டும் என விரும்பினால் நாம் ரூ. 1,62,162 யை முன்கூட்டியே செலுத்த வேண்டும். இந்த தொகையானது நமக்கு மாதந்தோறும் பென்ஷனாக வந்து சேரும்.
இதற்கு ரூபாய் எங்களிடமே இருக்கலாமே? என நீங்கள் நினைக்கலாம். இத்திட்டத்தின் மிக முக்கிய சிறப்பம்சம் பென்ஷனை தவிர்த்து நாம் செலுத்திய மொத்த தொகையும் நமக்கு 10 ஆண்டுகளுக்கு பின் மொத்தமாக திரும்ப தரப்படும். ஒருவேளை சந்தாதாரர் 10 ஆண்டுக்குள் இறக்க நேரிட்டால் அந்த மொத்த தொகையானது நாமினிக்கு சென்றடையும்.
மேலும் இந்த திட்டத்திற்கு 7.4% வட்டியாக தரப்படுகிறது. மேலும் இந்த தொகையின் 30% பணத்தை நாம் கடனாக முன்கூட்டியே வாங்கி கொள்ளலாம். எனவே மாதந்தோறும் ஓய்வூதியம் தரும் இந்த பொண்ணான திட்டத்தினை உங்கள் வீட்டில் உள்ள வயதானவர்களுக்கு உதவும்படி செய்யலாம்.