அஞ்சலகத்தில் பிபிஎப் கணக்கு திட்டம்

இன்று அஞ்சலகங்களில் பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் பல பயனுள்ள திட்டங்கள் வந்து விட்டன. எளிதில் ஏமாந்து விடாமல் பணத்தைப் பாதுகாப்பான முதலீடு செய்வதற்கு உத்தரவாதம் தரக்கூடிய பல திட்டங்கள் இங்கு உள்ளன.

உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்து பயன்பெறலாம். தற்போது பிபிஎப்(PPF) கணக்கு திட்டம் தொடங்குவதைப் பற்றிப் பார்ப்போம்.

அஞ்சலகத்தில் ஒரு உத்தரவாதம் தரக்கூடிய பயனுள்ள திட்டம். வரிச்சலுகை பெறலாம். இந்தக் கணக்கைத் தொடங்குபவர்களுக்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படும்.

இது ஒரு பாதுகாப்பான முதலீடு. குறைந்தபட்சம் ஆண்டுக்கு நீங்கள் ரூ.500 செலுத்தினால் போதும். இந்த கணக்கின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். 3வது நிதி ஆண்டிலிருந்து கடன் வசதி பெறலாம்.

அடையாளச்சான்று, முகவரி சான்று, பான் கார்டு, பாஸ்போர்ட் அளவு போட்டோ, படிவம் இ இவையே பிபிஎப் கணக்குத் திறக்க தேவையான ஆவணங்கள். குறைந்தபட்ச வயதுத் தகுதி 18.

PPF

பிபிஎப் கணக்கிற்கான வட்டி ஆண்டுதோறும் கட்டப்பட்டு மார்ச் 31ல் செலுத்தப்படுகிறது. 5 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்த பின்னர் தான் முன்கூட்டிய திரும்பப் பெறுதல்கள் உண்டு. இதர விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தை அணுகுங்கள்.

ஐபிபிபி(IPPB) செயலியைப் பதிவிறக்கம் செய்து ஆன்லைன் வழியாகவும் இந்தத் திட்டத்தில் நீங்களே எங்கிருந்தாலும் முதலீடு செய்யலாம்.

Leave a Comment