Connect with us

schemes

ரிஸ்க் இல்லாம Retirement-ல நிரந்தர ஓய்வூதியம்… எல்.ஐ.சி. சூப்பர் திட்டம் பற்றி தெரியுமா?

Published

on

பணி ஓய்வு பெற்றவர்கள் அதிக சிக்கல் இன்றி மிகவும் எளிய முறையில் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் பெறவே விரும்புவர். மாதாந்திர ஓய்வூதியம் வழங்கும் பல்வேறு திட்டங்கள் உள்ள நிலையிலும், நம்பகத்தன்மை மற்றும் நிரந்தர வருவாய் கிடைக்கும் திட்டங்கள் மிகவும் சொற்பமாகவே உள்ளது எனலாம். இத்தகைய திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புவோருக்காக பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. சாரல் ஓய்வூதிய திட்டத்தை வழங்கி வருகிறது.

எல்.ஐ.சி. சாரல் ஓய்வூதிய திட்டம் அரசின் பொதுத்துறை சார்ந்த திட்டம் என்பதால், பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள் இதே போன்ற பலன்கள் மற்றும் விதிமுறைகளையே பின்பற்ற வேண்டும். எனினும், இதில் எல்.ஐ.சி. திட்டத்தை பின்பற்றுவது சிறந்தது என சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த திட்டம் வாழ்க்கை முழுமைக்கும் பலன் அளிக்கும். மேலும், இந்த திட்டத்தில் முதலீடு செய்தவர் உயிரிழக்கும் பட்சத்தில், அவர் முதலீடு செய்த தொகை முழுமையாக அவரது குடும்பத்தாருக்கு வழங்கப்பட்டு விடும். மேலும், இதில் ஒருமுறை பணம் செலுத்தினாலே போதுமானது. வருடாந்திர அல்லது மாதாந்திர கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

எல்.ஐ.சி. சாரல் பென்ஷன் என்றால் என்ன?

எல்.ஐ.சி. சாரல் பென்ஷன் ஒருமுறை மட்டும் பணம் செலுத்தக்கூடிய திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் பெரும் தொகை (உதாரணத்திற்கு ரூ. 10 லட்சம்) முதலீடு செய்யும் பட்சத்தில் எல்.ஐ.சி. உங்களுக்கு ஒவ்வொரு மாதம், காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர அடிப்படையில் நிரந்தர ஓய்வூதியத்தை வழங்கும். இதில் முழுக்க முழுக்க முதலீட்டாளர் தேர்வு செய்யும் விருப்பம் வழங்கப்படுகிறது. ஓய்வுக்கு பின் நிரந்தர வருவாய் மற்றும் நிம்மதியான மனநிலையை விரும்புவோருக்கு இந்த திட்டம் சரியானதாக இருக்கும்.

எல்.ஐ.சி. சாரல் திட்டத்தை இருவிதங்களில் தேர்வு செய்யலாம்

விதம் 1: முதலீட்டு தொகையை முழுமையாக வழங்கும் முறை

இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் பட்சத்தில், முதலீடு செய்தவர் உயிரிழந்த பிறகு அவரது நியமனதாரருக்கு முதலீட்டு தொகை முழுமையாக திரும்ப வழங்கப்படடும்.

விதம் 2: கூட்டு முதலீட்டு முறை

இந்த திட்டத்தில் முதலீட்டாளர் மற்றும் அவரது மனைவி அவர்கள் உயிருடன் இருக்கும் வரை ஓய்வூதியம் பெறலாம். இதில் கணவன், மனைவி இருவரும் உயிரிழந்த பிறகு முழு முதலீட்டு தொகையும் அவர்களது நியமனதாரருக்கு வழங்கப்பட்டு விடும். ஒருமுறை தேர்வு செய்யப்பட்ட நியமனதாரரை இந்த திட்டத்தில் மாற்றவே முடியாது.

எல்.ஐ.சி. சாரல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்கள் மாதம் ரூ. 1000, காலாண்டுக்கு ரூ. 3000, அரையாண்டுக்கு ரூ. 6000 மற்றும் ஆண்டுக்கு ரூ. 12,000 வரை மட்டுமே அதிகபட்ச ஓய்வூதியமாக பெற முடியும்.

யார் யார் முதலீடு செய்யலாம்?

எல்.ஐ.சி. சாரல் ஓய்வூதிய திட்டத்தில் குறைந்தபட்சம் 40 வயதில் தொடங்கி அதிகபட்சம் 80 வயதுடையவர்கள் முதலீடு செய்ய முடியும். முதலீட்டாளர்களுக்கு வாழ்நாள் முழுக்க ஓய்வூதியம் வழங்குவதற்கு ஏற்ப முதலீட்டு தொகையில் எல்.ஐ.சி. எவ்வித கட்டுப்பாடும் விதிக்கவில்லை.

குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் திட்ட விவரங்கள் முழுக்க முழுக்க பொதுவான தகவல் அறிவிப்புக்கானது மட்டுமே. இதில் உள்ள பரிந்துரைகள் அனைத்தும் பொது வெளியில் கிடைக்கும் தகவல்கள் மற்றும் பொது வெளியில் வல்லுநர்கள் தெரிவித்த கருத்துக்கள் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

google news