india
பெண்களுக்கு அதிக வருமானம் தரும் அசத்தலான திட்டம்… உடனே முதலீடு செய்யுங்கள்…!
பெண்களுக்கு அதிக லாபம் தரக்கூடிய மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டம் குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் தொடர்ந்து அனைத்து துறைகளிலும் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள். பெண்கள் இல்லாத துறையே என்ற அளவுக்கு அவர்களின் முக்கியத்துவம் எல்லா துறைகளிலும் மேம்படுத்தப்பட்டு வருகின்றது. மத்திய, மாநில அரசுகளும் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை உருவாக்கி இருக்கின்றது. அந்த வகையில் பெண்களுக்கான பிரத்தியேகமான ஒரு திட்டம் குறித்து தான் நாம் இப்போது பார்க்க போகின்றோம்.
மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றது. சிறிய அளவில் முதலீடு செய்து இந்த திட்டத்தில் நாம் அதிக லாபத்தை பெற முடியும். இந்த திட்டமானது கிராமம், நகரம் என்று அனைத்து இடங்களிலும் வசிக்கும் பெண்களுக்காக சிறப்பான முதலீடுகளை தபால் அலுவலகத்தில் வழங்கி வருகின்றது. அந்த வகையில் போஸ்ட் ஆபீஸில் வழங்கும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு நல்ல வட்டி கிடைக்கின்றது.
மேலும் மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் உத்தரவாதமான வருமானமும் கிடைக்கின்றது. இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் பெண்கள் அதிக பலன்களை அடைந்து வருவதால் தொடர்ந்து முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த திட்டத்தில் பெண்கள் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகளுக்கு 2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டுக்கு இரண்டு ஆண்டுகளில் 7.5 வட்டி விகிதம் கிடைக்கும்.
தபால் அலுவலக திட்டங்களுக்கு பிரிவு 80c யின் கீழ் வரி விலக்கும் இருக்கின்றது. இதனால் இந்த சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் முதலீடு செய்யும் பெண்கள் அனைவருக்கும் வரிச்சலுகை வழங்கப்பட்டு வருகின்றது. திட்டமானது இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் கிடைக்கும் திட்டமாகும். இது பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் சிறப்பான சேமிப்பு திட்டம். இந்த திட்டத்தில் பெண்கள் மட்டும் தான் சேர முடியும். மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை தபால் நிலையத்தில் அவர்கள் திறந்து கொள்ள முடியும் ,
ஆனால் ஒரே நேரத்தில் 2 கணக்குகளை திறந்து கொள்ள முடியாது. மூன்று மாத இடைவெளியில் பயனார் இன்னொரு கணக்கை திறந்து கொள்ளும் வசதி இருக்கின்றது. இந்த திட்டத்தில் ஒருவர் 2 லட்சம் முதலீடு செய்தால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வு தொகையாக ரூ.2,32,044 கிடைக்கும். வட்டி மட்டும் ரூ.32,044 பெற முடியும். இப்படி குறுகிய காலத்தில் நல்ல வருமானத்தை கொடுக்கக்கூடிய திட்டமாக இந்த திட்டம் இருப்பது முதலீட்டாளர்களுக்கு பெரும் உதவியாக இருக்கின்றது.