மின் கட்டண உயர்வை சமாளிக்க சூப்பர் திட்டம்… இவ்வளவு நாள் இது தெரியாம போயிடுச்சே..!

இந்தியாவில் பொது மக்கள் நலன் கருதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. அடிப்படை தேவை, சுகாதாரம், மருத்துவம் என பொது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்தும், பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளன. மேலும், இது போல் இன்னும் பல திட்டங்களை தீட்டுவதில் அரசு துறைகள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன.

இதேபோல் மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களில் ஒன்றுதான் பிரதான் மந்திரி சூர்ய கர் முப்த் பிஜிலி யோஜனா திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் பொது மக்கள் மின் கட்டணத்தை பெருமளவு குறைக்க முடியும். இந்தத் திட்டம் இலவச மின்சார திட்டம் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் பொது மக்கள் தங்களுக்கு தேவையான மின்சாரத்தை தாங்களாகவே தயாரித்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் மின் கட்டண பிரச்சினையில் இருந்து விடுபடலாம். வீட்டின் மேற்கூரையில் சூரிய மின் தகடுகளை நிறுவிக் கொள்வதற்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. இதை கொண்டு பொது மக்கள் மின் கட்டணம் செலுத்துவதில் இருந்து பெருமளவுக்கு தப்பித்துக் கொள்ளலாம்.

எனினும், இந்தத் திட்டம் அனைவருக்கும் கிடைக்காது. இந்தத் திட்டத்தில் பயன்பெற வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகுதிகளை அரசு நிர்ணயித்துள்ளது. மத்திய அரசு நிர்ணயித்துள்ள தகுதிகளை பூர்த்தி செய்யாமல் இந்தத் திட்டத்தின் கீழ் பலன் பெற முடியாது.

தேவையான தகுதிகள் என்னென்ன?

பிரதான் மந்திரி சூர்ய கர் முப்த் பிஜிலி யோஜனா திட்டத்தில், சொந்தமாக மேற்கூரை உள்ள வீடுகளில் மட்டுமே சூர்ய மின் தகடுகளை நிறுவ முடியும். வீட்டில் மேற்கூரை இல்லாத பட்சத்தில் வேறொருவருடன் மேற்கூரையை பகிர்ந்து கொண்டால் இந்தத் திட்டத்தில் பயன்பெற முடியாது. சூர்ய தகடுகளை நிறுவுவதற்கு ஏற்ற மற்றும் தனிப்பட்ட கூரைகள் உள்ள வீடுகள் மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும் என்று அரசு செரிவித்து இருக்கிறது.

வேறு ஏதும் திட்டத்தின் கீழ் சூர்ய மின் தகடுகளை நிறுவுவதற்கு ஏற்கனவே மானியம் பெற்றிருப்பின், பிரதான் மந்திரி சூர்ய கர் முப்த் பிஜிலி யோஜனா திட்டத்தின் கீழ் மானியம் பெற முடியாது. புதிய பயனாளிகளை சேர்ப்பதே இந்தத் திட்டத்தின் குறிக்கோள் ஆகும்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பயன்பெறவே மத்திய அரசு இந்தத் திட்டத்தை உருவாக்கி இருக்கிறது. இதனால் வருமான வரி செலுத்துவோர், அரசு பணியாளராக இருப்பவர்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெற முடியாது.

பிரதான் மந்திரி சூர்ய கர் முப்த் பிஜிலி யோஜனா திட்டத்தின் கீழ் பயன்பெற https://pmsuryaghar.gov.in என்ற இணைய முகவரியை இதர விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

Leave a Comment