Connect with us

latest news

விவசாயிகளுக்கு புதுப்புது டெக்னிக்கல் தரும் ஒரு உன்னத திட்டம்

Published

on

விவசாயமே ஒரு நாட்டின் முதுகெலும்பு. நாட்டின் முன்னேற்றமே வேளாண் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதன் மூலமே சாத்தியமாகிறது. ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சியிலும் கிராம முன்னேற்றமே பிரதானமாகிறது.

இதனால் தான் எந்த அரசு வந்தாலும் வேளாண்மைக்கு முக்கியத்துவம் தருகிறது. அதை ஊக்குவிக்கும் பொருட்டு பல நல்ல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத்திட்டம் பற்றி இங்கு பார்ப்போம்.

விவசாயத்துறையை மேம்படுத்தும் நோக்கில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலமாக விவசாயிகள் நீடித்த நிலையான விவசாயம் செய்ய முடிகிறது.

Bima 2

அசாதாரண சூழ்நிலைகளால் விவசாயிகளுக்கு பயிர் இழப்பு மற்றும் பயிர் பாதிப்பு ஏற்படும் போது நிதி உதவி வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு புதிய மற்றும் நவீன தொழில்நுட்பங்களை எடுத்து சொல்லப்படுகிறது.

இதன் மூலமாக விவசாய உற்பத்தியை மேம்படுத்த முடிகிறது. தொடர்ந்து விவசாயம் செய்வதன் மூலமாக நிலையான வருமானத்தை விவசாயிகள் பெற முடிகிறது.

பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்வதன் மூலம் மேற்கண்ட பலன்களை விவசாயிகள் பெறலாம்.

இத்திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட பயிர்களுக்கு விளைச்சல் விவரங்கள் கணிக்கப்பட்டு தொடர்புடைய காப்பீட்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் தொடர்புடைய துறையினரால் ஒத்திசைவு செய்யப்பட்டு அறிவிக்கை செய்யப்பட்ட பயிர் பரப்பு விவரங்கள் ஒவ்வொரு பருவத்தின் முடிவிலும் காப்பீட்டு கழகங்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன.

அபாய இழப்பீடு

விவசாயிகள் தங்கள் உணவுப்பயிர்களைக் காப்பீடு செய்ய காப்பீட்டுத் தொகையில் 2 சதவீதத்தைச் செலுத்தினால் போதும். மீதமுள்ள காப்பீட்டுத் தொகையை மத்திய, மாநில அரசுகள் செலுத்துகின்றன. எதிர்பாராத காரணத்தால் விதைப்பு தடை பட்டால் அதற்கு இழப்பீட்டைப் பெற முடியும்.

வறட்சி, வெள்ளம், தண்ணீர் சூழ்வது, திடீர் மழையால் மண் சரிவு, ஆலங்கட்டி மழை, இயற்கையால் தீ விபத்து, புயல் என சேதம் ஏற்பட்டால் அறுவடைக்குப் பிந்தைய பயிர்களுக்கும் ஒருங்கிணைந்த அபாய இழப்பீடு வழங்கப்படுகிறது.

பதிவு செய்வது எப்படி?

விவசாயிகள் இந்தத் திட்டத்தில் பதிவு செய்ய வேண்டுமானால் அருகில் உள்ள வங்கி, தொடக்க வேளாண் கடன் சங்கம், பொதுச்சேவை மையம், கிராம அளவிலான தொழில் முனைவோர் வேளாண்துறை அலுவலகம், காப்பீட்டு நிறுவனத்தின் பிரதிநிதியைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு www.pmfby.gov.in  என்ற இணைய தள முகவரியைப் பாருங்கள்.

google news