latest news
கிராம மக்களுக்கு அஞ்சல் துறை வழங்கும் அருமையான திட்டம்
இந்திய அஞ்சல் துறையில் உள்ள ஒரு அருமையான திட்டம் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம். ஆங்கிலத்தில் ஆர்பிஎல்ஐ (RPLI – Rural Postal Life Insurance )என்று அழைக்கப்படும் இந்தத் திட்டம் 1995ல் கிராமப்புற மக்களுக்காக கொண்டு வரப்பட்டது.
கிராமப்புற மக்களுக்கு காப்பீடு வழங்குவதும், நலிவடைந்த பிரிவினர் மற்றும் கிராமப்புற பெண் தொழிலாளர்கள் பயன்பெறுதும் தான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்.
மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கும் ஒரு ஆயுள் காப்பீட்டை ஏற்படுத்த வேண்டும் என்று இந்திய அஞ்சல் துறை இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
இது மத்திய அரசு நடத்தும் திட்டம். நம்பகத்தன்மை வாய்ந்தது. குறைந்த பிரிமியம், அதிக போனஸ் கொண்டது.
செலுத்தும் பிரியமத் தொகைக்கு வருமான வரிச்சலுகை உண்டு. குறைந்தது ரூ.10 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை எத்தனை பாலிசிகளாகவும் எடுக்கலாம்.
இந்தத் திட்டத்தில் 19 முதல் 55 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். இந்தத் திட்டத்தில் சேர்ந்தவர்கள் இந்தியாவில் உள்ள எந்த அஞ்சல் அலுவலகத்திலும் பிரிமியத் தொகையை செலுத்தலாம். 3 வருடங்களுக்குப் பிறகு கடன் பெறும் வசதி உண்டு. வருடத்திற்கு 10 சதவீத வட்டி மட்டும் தான். கடன் பெற்றாலும் பாலிசிக்கு முழு போனஸ் கிடைக்கும்.
3 வருடங்களுக்குப் பிறகு பாலிசியை சரண்டர் செய்து கொள்ளலாம்.
ஒருவேளை பாலிசிதாரருக்கு இறப்பு நேர்ந்தால் பாலிசி தொகை முழுவதும் போனஸ் சேர்த்து குடும்பத்திற்கு, வாரிசுதாரருக்கு வழங்கப்படும்.
இடையில் பிரிமியம் செலுத்த தவறி விட்டால் பாலிசியைப் புதுப்பிக்கும் வசதி உண்டு. பிரிமியம் மாதாந்திரம், காலாண்டு, அரையாண்டு என்ற முறையில் செலுத்தினால் பிரிமியத்தொகையில் சலுகை உண்டு. வாரிசுதாரர் நியமனம் மற்றும் மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சல் கிளையை அணுகுங்கள்.