latest news
வீட்டில பெண் குழந்தை இருந்தா தமிழ்நாடு அரசு 50,000 கொடுக்குதாம்.. உடனே விண்ணப்பியுங்கள்

தமிழ்நாடு அரசு பெண் குழந்தைகளின் நலனுக்காக ஒரு மறுமலர்ச்சி முயற்சியை முன்னெடுத்து வருகிறது. முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் என்று அழைக்கப்படும் இந்த திட்டம் பெண் குழந்தைகளின் கல்வி நிதிநிலை மற்றும் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு பெண் குழந்தை உள்ள குடும்பங்களுக்கு 50,000 மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தலா 25,000 என்று வீதத்தில் அரசு வைப்பு தொகையாக சேமித்து வைக்கிறது. இந்தத் தொகை தமிழ்நாடு பவர் பினான்ஸ் நிறுவனத்தில் வைக்கப்பட்டு குழந்தை 18 வயதை அடையும் போது வட்டி உடன் சேர்த்து பெற்று தரப்படும்.
மேலும் குழந்தை 6-ம் வயதை தொடங்கும் தருவாயில் இருந்து ஆண்டுக்கு 1800 ரூபாய் கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. இது பள்ளி செலவுகளுக்கு நல்ல துணையாக அமைகிறது. இந்த திட்டத்தில் சேர தகுதி பெற்றிருக்க குடும்பத்தின் ஆண்டு வருமாறு 72,000-த்தை விட குறைவாக இருக்க வேண்டும். மேலும் குறைந்தது 10 ஆண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்திருக்க வேண்டும்.
மூன்று பெண் குழந்தைகள் உள்ள குடும்பங்களும் இதில் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு குழந்தைக்கும் 25000 விதம் வழங்கப்படும். இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய ஆவணங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் வருமான சான்று, குடும்ப அடையாள அட்டை, வசிப்பிட சான்று, பத்து ஆண்டுகள் தமிழ்நாட்டில் வசித்ததை நிரூபிக்கும் ஆவனம், பெற்றோரின் அடையாள அட்டை, ஆதார், வாக்காளர் அடையாள அட்டை கணக்கிட்டு புத்தகம் அல்லது வங்கி விவரங்கள் இந்த ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
