latest news
ஹெலன் கெல்லர் விருது முதல் பிங்க் ஆட்டோ வரை… அட்டகாசமான அறிவிப்பால் அசரடித்த தமிழக அரசு!
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக அரசு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது. மாற்றுத்திறனாளிகள், பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் படிப்பு என பல நோக்கத்தில் யோசிக்கப்பட்டு இந்த அறிவிப்புகள் வெளியாகி இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவுசார் குறைபாடு மற்றும் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 1000 மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுக்கு நவீன இயன்முறை உபகரணங்கள் வழங்கப்படும். பார்வை திறன் குறைந்த மாணவர்கள் தங்கி படிக்கும் தொழிற்பயிற்சி நிலைய யூனிபார்ம்களுக்கு ரூ.600 மானியமாக வழங்கப்படும்.
செவித்திறன் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு செயல்படும் 10 அரசு சிறப்பு பள்ளிகளில் கியூஆர் கோட் மூலம் அறிந்துக்கொள்ள பாடத்திட்டம் உருவாக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் ஒரே நேரத்தில் 200 பேர் தங்கி படிக்க விடுதி வசதியும், சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படும். சிறந்த மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நல ஆர்வலர் ஹெலன் கெல்லர் விருது வழங்கப்படும்.
தனியாரால் நடத்தப்படும் முதியோர் இல்லங்கள் மற்றும் பணிபுரியும் பெண்கள் விடுதி உரிமம் வாங்க சிம்பிள் கவர்னன்ஸ் திட்டம் மூலம் நடைமுறை எளிதாக்கப்படும். அங்கன்வாடி பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்தப்படும். 40 லட்சம் மதிப்பீட்டில் முக்கிய சுற்றுலா தளங்களில் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்.
2 கோடி மானியத்தில் 200 பெண்களுக்கு பிங்க் ஆட்டோ வழங்கப்படும். பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ஜிபிஎஸ் பொருத்தப்பட்டு இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.