புதிய தொழிலாளர் சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதனால் இந்தியாவில் இருக்கும் தொழிலாளர்களுக்கு சிறந்த நன்மை விளைவிக்கும் வகையில் இந்த சட்ட திருத்தம் இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இனிமேல் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரே சட்டம் தான் என்றும் இதனால் சம்பளம், வேலை பாதுகாப்பு, ப்சமூக பாதுகாப்பு என எல்லாம் எளிமையான வகையில் அமையும். பல ஆண்டுகளாக இந்தியாவில் நடைமுறையில் இருந்த 29 பழைய சட்ட திருத்தங்களுக்கு பதிலாக இந்த புதிய சட்டம் நமக்கு வந்துள்ளது.
இது ஒருவருக்கு சம்பளம் எப்படி கொடுக்க வேண்டும் உழைக்கும் தொழிலாளர்களை எப்படி பாதுகாப்பாக வைக்க வேண்டும் அந்த நிறுவனங்கள் தொழிலாளர்களை எப்படி நடத்த வேண்டும் மேலும் எப்படி செயல்பட வேண்டும் என்பதை இந்த சட்ட திட்டங்கள் எடுத்துரைக்கிறது.
மேலும் இதை பற்றி பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறுவதாவது,” சுதந்திரத்திற்கு பிறகு தொழிலாளர்களை கருத்தில் கொண்டு மிக முக்கியமான மற்றும் விரிவான சீர்திருத்தங்களில் ஒன்று இந்த சட்ட திருத்தம். இந்த சட்டம் நமது தொழிலாளர்களுக்கு பெரிய அதிகாரத்தை அளிக்கிறது”.
”அது மட்டும் இல்லாமல் நிறுவனங்களுக்கு சட்ட விதிகளை பின்பற்றுவதற்கு எளிதாகவும் ஆரோக்கியமான வணிகத்திற்கு ஊக்குவிக்கிறது. சிறந்த எதிர்கால இந்தியாவை இது உருவாக்கும். அது மட்டும் இல்லாமல் பல ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளையும் இந்த சட்டம் அதிகரிக்கும். அதனால் இந்தியா வளரும் பாதையில் நமது பயணத்தை விரிவு படுத்துகிறது”.
”மேலும் இதனால் குறைந்தபட்ச ஊதிய பாதுகாப்பு கிடைக்கும். இளைஞர்களுக்கு முறையான பணி நியமன கடிதங்களும் பெண்களுக்கு சம ஊதியம் பல கோடி தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு குறிப்பிட்ட கால ஊழியர்களுக்கு ஒரு வருடத்திற்கு பிறகு கிராஜுவிட்டி மற்றும் கூடுதல் நேர வேலைக்கு இரட்டிப்பு சம்பளம் ஆகியவற்றை உறுதி செய்யும்”.
”இதற்கு முன் ஒரு நிறுவனத்தில் ஐந்து ஆண்டு நிரந்தர சேவை செய்தால் தான் இந்த நலத்தொகை கிடைக்கும். ஆனால் இந்த புதிய தொழிலாளர் சட்டம் மாற்றத்தின் படி தனியார் துறையில் பணிபுரியும் பல லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு பெரும் நன்மையை வழங்குகிறது”. என்று கூறி உள்ளார்.




