Connect with us

Cricket

ஐபிஎல் 2025-ல் எம்.எஸ். டோனி.. அக்டோபர் 31 தெரிந்துவிடும்.. சி.எஸ்.கே. சி.இ.ஓ. சொன்ன முக்கிய தகவல்

Published

on

ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடரில் எம்.எஸ். டோனி தக்கவைக்கப்படுவது தொடர்பாக சி.எஸ்.கே. அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பதில் அளித்துள்ளார். ஐ.பி.எல். தொடரில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சி.எஸ்.கே. அணியில் எம்.எஸ். டோனி அடுத்த சீசனிலும் விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இது குறித்து பேசும் போது, எம்.எஸ். டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மற்றொரு ஐ.பி.எல். சீசனில் விளையாட வேண்டும் என்று கூறினார். எனினும், முந்தைய ஆண்டுகளில் கூறியதை போல், கடந்த முறை மீண்டும் ஐ.பி.எல்.-இல் விளையாடுவது பற்றி எம்.எஸ். டோனி எந்த கருத்தும் கூறாமல் இருக்கிறார். கடந்த ஐ.பி.எல். 2024 சீசன் துவங்கும் முன், இதுவே தனது கடைசி சீசனாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

ஆனாலும், கடந்த தொடரில் சென்னை அணி கோப்பையை வெல்லாமல் போனதால் எம்.எஸ். டோனி திட்டங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “எங்களுக்கும் எம்.எஸ். டோனி சி.எஸ்.கே. அணியில் விளையாட வேண்டும் என்றே உள்ளது. ஆனால், டோனி எங்களிடம் இதுபற்றி எதையும் உறுதியாக கூறவில்லை. ‘அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் நான் கூறிவிடுகிறேன்’ என்றே டோனி தெரிவித்துள்ளார். அவர் விளையாடுவார் என்று நம்புவோம்,” என்று காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பின் படி, ஐ.பி.எல். 2025 தொடரில் அணிகள் சர்வதேச கிரிக்கெட்டில் ஐந்து ஆண்டுகள் வரை விளையாடாமல் உள்ள வீரர்களை அன்கேப்டு பிரிவில் அணியில் தக்கவைத்துக் கொள்ளலாம். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சி.எஸ்.கே. அணியில் எம்.எஸ். டோனி தக்கவைக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.

google news