Connect with us

Cricket

INDvNZ: காலம் மாறிடிச்சி, இப்போலாம் அப்படி செய்ய முடியாதுங்க – கவுதம் கம்பீர்

Published

on

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் புள்ளிகள் சார்ந்த அழுத்தம் தான் அணிகள் சொந்த மண்ணில் தொடரை இழப்பதற்கு காரணமாக அமைகின்றன.

மும்பையை அடுத்த வான்கடே மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்குகிறது. ஏற்கனவே டெஸ்ட் தொடரை இழந்துவிட்ட நிலையில், தொடரில் ஒயிட்வாஷ் செய்யப்படுவதை தவிர்க்கவாவது இந்திய அணி கடைசி போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

முன்னதாக நியூசிலாந்து அணி இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது. மேலும் இந்திய மண்ணில் தனது முதல் டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்று அசத்தியுள்ளது. மறுப்பக்கம் இந்திய அணி 12 ஆண்டுகளுக்கு பின் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது.

இரு அணிகள் இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டியை ஒட்டி செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், “என்னை பொருத்தவரை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் மிகவும் முக்கியம். ஒவ்வொரு டெஸ்ட் போட்டியும் முக்கியமான ஒன்று. இனியும் செத்த ரப்பர்கள் இல்லை.”

“இது டி20 கிரிக்கெட்டை சார்ந்தது. போட்டியை டிரா செய்யும் காலம் மலையேறிவிட்டது, பேட்டர்கள் தற்போது அடித்து ஆட ஆரம்பித்து விட்டனர். போட்டிகள் தற்போது முடிவுகளை நோக்கியை நகரும். இதற்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் மற்றும் டி20 கிரிக்கெட் என இருதரப்பு அழுத்தம் தான் காரணம்,” என்று தெரிவித்தார்.

google news