Connect with us

Cricket

ரொம்ப மோசம்.. கோலியை கிழித்த EX. வீரர்!

Published

on

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் விராட் கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இரண்டாம் நாள் தொடக்கத்தில் இந்திய அணி தனது முதலாவது இன்னிங்ஸில் பேட்டிங்கை தொடங்கியது. இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஜோடி ரன் குவிப்பை தொடங்கிய நிலையில், ஜெய்ஸ்வால் 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி ஒன்பது பந்துகளை எதிர்கொண்டார். இதில் 1 ரன் எடுத்த விராட் கோலி தனது விக்கெட்டை பறிக்கொடுத்து பெவிலியன் திரும்பினார். இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டத்தில் விராட் கோலி ஆரம்பத்திலேயே அவுட் ஆகி வெளியேறியது அனைவரையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. இது குறித்து முன்னாள் இந்திய அணி வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விராட் கோலியை கடுமையாக சாடினார்.

இது குறித்த எக்ஸ் தள பதிவில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், “ஓ, டியர்! அவர் விளையாடியது அவரது தனது வாழ்நாளில், அவுட் ஆவதற்காக அடித்த மிக மோசமான ஷாட் என்று விராட் கோலிக்கே தெரிந்து இருக்கும். அவரை நினைத்தால் பாவமாக இருக்கிறது.. ஏனெனில் அவர் எப்போதும் உறுதியாகவும், உண்மையான நோக்கத்திற்காக விளையாட வருவார்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி கைவசம் ஒன்பது விக்கெட்டுகளை வைத்திருந்தது. முதல் ஆட்டநேர முடிவில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா மட்டும் தனது விக்கெட்டை இழந்திருந்தது. எனினும், இரண்டாம் நாளில் இந்திய அணி ரன் குவிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து வருகிறது. இரண்டாம் நாளின் முதல் செஷனில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களை எடுத்திருக்கிறது.

google news