Connect with us

Cricket

தோல்வி எதிரொலி.. ஸ்குவாடில் இணைந்த புது பிளேயர்.. மற்ற 2 போட்டிகளில் வெற்றி கன்ஃபர்ம்..!

Published

on

இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்திய மண்ணில் கிட்டத்தட்ட 36 ஆண்டுகளுக்கு பின் நியூசிலாந்து அணி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. மழையால் தொடர் இடையூறுகளை கடந்த முதலாவது டெஸ்ட் போட்டி நடந்து முடிந்துள்ளது. பல்வேறு காரணங்களால் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியது.

அந்த வரிசையில், முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியதும் இந்திய அணியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி தான் அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அணியில் 16வது வீரர் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

நியூசிலாந்து அணியுடன் அடுத்து நடைபெற உள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய ஸ்குவாடில் வாஷங்டன் சுந்தர் இணைந்துள்ளார். ஆல் ரவுண்டர் வீரரான வாஷிங்டன் சுந்தர் வலது கையில் ஆஃப்-ஸ்பின் வீசுவதும், இடதுகை பேட்டிங் செய்வார். அணி அறிவிக்கப்படும் போது ரிசர்வ் வீரராக கூட இல்லாத நிலையில், தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரின் மற்ற இரு போட்டிகளில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மழை குறுக்கீடுகள் இருந்த போதிலும், இந்திய அணி கேப்டன் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது, பந்துவீச்சில் விரைந்து விக்கெட் எடுக்க தடுமாறியது போன்ற காரணங்களால் நியூசிலாந்து அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது. நியூசிலாந்து தரப்பில் டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திராவின் அபார பேட்டிங் முதல் இன்னிங்ஸில் கைக்கொடுத்தது.

இதேபோல் பந்துவீச்சில் மேட் ஹென்றி மற்றும் வில்லியம் ரூர்கி அபாரமாக செயல்பட்டனர். இதன் மூலம் 1988 ஆம் ஆண்டுக்கு பின் நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்த போதிலும், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் 2023-25 புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

இந்தியா தரப்பில் சர்ஃப்ராஸ் கான், ரிஷப் பண்ட் அபாரமாக பேட் செய்த போதிலும், இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய பந்துவீச்சாளர்கள் 107 ரன்கள் எனும் எளிய இலக்கை கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியை தழுவியது.

google news