2019 முதல் தயாநிதி மாறன் தான் எம்பி.. 2011 முதல் சேகர் பாபு தான் எம்.எல்.ஏ.. 2022 முதல் பிரியா தான் மேயர்.. ஆனால் வடசென்னை இன்னும் முன்னேறவே இல்லை.. தலைமுறை தலைமுறையா வடசென்னை மக்கள் உங்களுக்கு ஓட்டு போட்டது அவங்களோட ஏமாளித்தனம் இல்லை… உங்க மேல வச்சிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை! ஆனா, நீங்க அதை வெறும் ‘வாக்கு வங்கி’ விளம்பரமா மாத்திட்டீங்க! தென் சென்னைக்கு ஐடி பூங்காவும் சொகுசு பில்டிங்கும்… வடசென்னைக்கு மட்டும் குறுகலான தெருவும் தேங்கி கிடக்குற குப்பையுமா?
சென்னை மாநகரத்தின் ஆன்மாவாகவும், உழைக்கும் மக்களின் உறைவிடமாகவும் திகழும் வடசென்னை பகுதி, கடந்த பல தசாப்தங்களாக தங்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்காக