india
கைது வரை சென்ற களவு…உங்க நட்ப வேற வழியா காமிச்சிருக்கலாமே?…
உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் நண்பன் மனைவியின் மருத்துவ செலவிற்காக பைக் களவில் ஈடுபட்ட நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பெங்களூருவைச் சேர்ந்தவர் பழ வியாபாரி அசோக். வசதியாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் பல்ஸர், கே.டி,எம். பைக்குகளை திருடி வந்திருக்கிறார். இவர் திருட்டில் ஈடுபடுவதை யாரும் கண்டுபிடிக்க முடியாத வண்ணம் மற்றவர்களின் முன்னிலையில் வாழ்ந்து வந்திருக்கிறார்.
ஆனால் திடீரரென போலீஸில் சிக்கி இருக்கிறார். முதல் கைதிற்கு பின்னர் வாகனத்திருட்டில் அவர் ஈடுபடுவதை அவர் நிறுத்தவில்லை. மீண்டும், மீண்டும் திருட்டில் ஈடுபடுத்தி வந்திருக்கிறார். தனது கனவனின் இந்த செயல்களை கண்டு சகிக்க முடியாமல் அசோக்கின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். அதன் பின்னும் தொடர்ந்து பைக் திருட்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வந்திருக்கிறார் அசோக்.
சமீபத்தில் அவரின் கூட்டாளியுமான சதீசும் பெங்களூரு கிரி நகர் பகுதியில் பைக் திருட்டில் ஈடுபட்ட போது கையும் களவுமாக சிக்கி இருக்கிறார். இவர்கள் இருவரையும் கைது செய்த காவல் துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணையை நடத்தியிருக்கின்றனர். அப்போது அசோக் சொன்ன தகவல் போலீஸாரைன் அதிர்ச்சியிலலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியிருக்கிறது. அசோக்கின் மனைவி அவரை விட்டு சென்ற நேரத்தில் பழக்கமான நண்பர் ஒருவரின் மனைவிக்கு மார்பகப் புற்று நோய் இருந்துள்ளதாம்.
அசோக் தான் சிரமப்பட்ட நேரத்தில் தனக்கு மிகப்பெரிய பலமாக இருந்து உதவிய நண்பரின் மனைவி மருத்துவச் செலவிற்கு பணம் கொடுத்து உதவுவதற்காகவே திருட்டு சம்பவங்களில் ஈடுபடுத்தி வந்ததாக தெரிவித்திருக்கிறார். திரைப்படமாக அவர் சொன்னதை கதையாக வைத்து எடுத்தால் அவார்டு வாங்கும் அளவில் அழுத்தம் கொண்ட அசோக்கின் நட்பிற்கான கைமாறை அவர் காட்டும் விதத்தில் காட்டியிருந்தால் இந்த உலகமே அவரை பாராட்டியிருக்கும் என அசோக்கின் வாக்குமூலத்தை அறிந்த அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்லி வருகின்றனர்.