Connect with us

india

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க… சீரும் பாம்பாக மாறிய பெண்ணின் உடை… வைரலாகும் வீடியோ…!

Published

on

இளம் பெண் ஒருவர் சீரும் பாம்பு உடைய வித்யாசமான உடையை அணிந்திருந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

செயற்கை அறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாம்பு உடை ஒன்றை பெண் அணிந்திருந்தார். அந்த பாம்பானது பெண்ணை பார்ப்பவர்களை நோக்கி சீறுகின்றது. இந்த வீடியோவானது இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாகி வருகின்றது. google நிறுவனத்தில் மென்பொருள் இன்ஜினியராக பணியாற்றி வருபவர் கிறிஸ்டினா எர்னெஸ்ட்.

இவர் தன்னுடைய தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி புதிய உடை ஒன்றை வடிவமைத்து இருக்கின்றார். பிளாஸ்டிக் , மர துண்டுகள் மற்றும் கம்பிகள் ஆகியவற்றை கொண்டு பாம்பு வடிவ தோற்றத்தை உருவாக்கியது மட்டும் இல்லாமல் மோட்டார்களை இணைத்து அதை இயங்கும் வகையிலும் தயார் செய்து இருக்கின்றார். அதை பெண்கள் அணியும் மேலாடையுடன் இணைத்து வடிவமைத்து முடித்து இருக்கின்றார்.

 

View this post on Instagram

 

A post shared by She Builds Robots (@shebuildsrobots)

இந்த உடையுடன் இணைக்கப்பட்டுள்ள பாம்பு யாராவது அவர் அருகில் சென்றால் சென்சார் உதவியுடன் இனம் கண்டு உடனே தலையையும் உடலையும் அசைக்க தொடங்கி விடுகின்றது. மேலும் பாம்பின் பற்கள் கூர்மையானதாகவும், அது சீரும் விதத்தையும் பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டு போய் இருக்கிறார்கள். புதுமையான இந்த உடையை வடிவமைத்ததற்கு பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்திருந்தாலும் சிலர் எதிர்ப்புகளையும் தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இந்த வீடியோ காட்சி தற்போது வரை 30 லட்சத்துக்கு அதிகமானவரால் பார்க்கப்பட்டுள்ளது.

google news