india
செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி…விசாரணை தேதியை தள்ளி வைத்த நீதிமன்றம்…
சட்ட விரோத பண பரிமாற்றம் செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருந்தார். அமலாக்கத்துறை தொடர்ந்த இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி கோரியிருந்தார். இந்நிலையில் செந்தில் பாலஜியின் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வழக்கு மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இன்றைய விசாரணையில் செந்தில் பாலாஜி தரப்பில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. ஒரு மனுவில் வங்கிகள் அளித்துள்ள ஆவணங்களுக்கும், அமலாக்கத்துறை வழங்கியுள்ள ஆவணங்களுக்கும் இடையே வேறுபாடு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அமலாக்கத்துறை வழங்கிய ஆவணங்களில் கையால் எழுதி திருத்தப்பட்டுள்ளது. இதனை தடயவியல் துறைக்கு அனுப்பி வைத்து ஆராய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இரண்டாவது மனுவில் சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு அமலாக்கத்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
வங்கியில் இருந்து பெறப்பட்ட ஆவணங்களை தான் வழங்கியுள்ளோம். வழக்கை இழுத்தடிக்கும் நோக்கத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் இந்த இரண்டு மனுக்கள் தொடரப்பட்டுள்ளது. இதை தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என வாதாடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி அல்லி சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அத்தோடு குற்றச்சாட்டுக்கள் பதிவுக்கான வழக்கின் விசாரணையை வருகிற இருபத்தி இரண்டாம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அதோடு அன்றைய தினம் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.