Connect with us

latest news

BSNL-ன் புது 5g ஸ்மார்ட்போன்… அதுவும் இவ்வளவு சிறப்பம்சங்களுடனா..? இது சூப்பரா இருக்கே..!

Published

on

அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனம் பாரத் சஞ்சார் நிகம் லிமிட் அதாவது பிஎஸ்என்எல். இந்த bsnl 5g சாதனத்துடன் ஸ்மார்ட் போன் சந்தையில் புதிய அலைகளை உருவாக்க உள்ளது. அவர் தொழில்நுட்பத்தை ஈர்க்கக்கூடிய அம்சங்களுடன் இணைந்து சிறந்த ஸ்மார்ட் ஃபோன்களுக்கு போட்டியாக அமையும் என்று கூறுகின்றது. அந்த வகையில் பிஎஸ்என்எல் தயாரிக்க இருக்கும் புதிய செல்போனின் பிரத்தியேக அம்சங்களை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

இந்த செல்போனில் 6.78-இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே வசதியை கொண்டிருக்கும். இதனை நீங்கள் பயன்படுத்தும் போது வீடியோக்களை பார்க்கும்போது கேம் விளையாடும் போது மிகச்சிறந்த அனுபவத்தை கொடுக்கும். இந்த செல்போனின் மென்மையான ஸ்க்ரோலிங் மற்றும் அனிமேஷன் மற்ற ஸ்மார்ட்போன்களில் வழங்குவதை விட அதிகமாக இருக்கும் என்று கூறுகின்றது.

இந்த செல்போனில் மிக அற்புதமான அம்சம் என்றால் அது கேமரா அமைப்புதான். பிரத்யேக கேமராக்களுக்கு போட்டியாக ஒரு புகைப்பட அனுபவத்தை வழங்க BSNL அனைத்து முயற்சி செய்து வருகின்றது. இதன் பின்பக்க கேமரா 200 மெகாபிக்சல் கொண்டிருக்கும். மிகச் சிறந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுப்பதற்கு பயன்படுகின்றது. அது மட்டும் இல்லாமல் தொலைபேசியில் கூடுதல் பின்புற கேமராக்கள் இதில் அடங்குகின்றது. 20 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 13 மெகாபிக்சல் சென்சார் இந்த கேமராவில் இருக்கின்றது.

அவை அல்ட்ரா-வைட் மற்றும் டெலிஃபோட்டோ லென்ஸாக செயல்படும். பயனர்களுக்கு அவர்களின் புகைப்படம் எடுப்பதில் அதிக பன்முகத்தன்மையை வழங்குகிறது. செல்ஃபி ஆர்வலர்களுக்கு செல்போனில் இருக்கும் முன் பக்க கேமரா 58 மெகாபிக்சல் சென்சாருடன் வழங்கப்படுகின்றது. இது உயர்தர வீடியோ மற்றும் அழைப்புகளை வழங்கும்.

5ஜி இணைப்பு மற்றும் சிறந்த டிஸ்ப்ளே போன்ற அம்சங்களை தக்க வைத்துக் கொள்ள ஸ்மார்ட் போனில் சிறந்த பேட்டரி இருக்க வேண்டும். அந்த வகையில் இந்த ஸ்மார்ட் போன் 5800mAh பேட்டரி திறனுடன் வருவதாக கூறப்படுகிறது. இது பயனர்களுக்கு சிறந்த பேட்டரி ஆயுளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் 6 ஜிபி ரேம் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் சேமிப்பகதற்காக 128 ஜிபி உள் நினைவகத்தையும் இது வைத்திருக்கும் என கூறப்படுகின்றது. மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக விரிவாக்க கூடிய சேமிப்பகத்தை இந்த செல்போன் ஆதரிக்குமா? என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை, இந்த ஸ்மார்ட்போன் 2025 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் பிற்பகுதியில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. விலை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

தற்போது வரை இந்த செல்போனின் சிறப்பம்சங்கள் மட்டுமே வெளியாகி இருக்கின்றது. இந்த சாதனம் கட்டாயம் நடுத்தர முதல் அதிக விலை வரம்பில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  பிஎஸ்என்எல் வரவிருக்கும் 5g ஸ்மார்ட்போன் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒரு சிறந்த ஃபோனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

google news