ChatGPT யூஸ் பண்றீங்களா..? மறந்தும் இந்த தப்ப மட்டும் பண்ணிடாதீங்க.. அது என்ன தெரியுமா..?

இன்றைய காலகட்டத்தில் எதற்கெடுத்தாலும் என்ன தேவைகள் என்ன சந்தேகங்கள் என்றாலும் நாம் உடனடியாக CHATGPT போன்ற AI தான் பயன்படுத்துகிறோம். அவ்வாறு பயன்படுத்தும் போது நாம் தேடப்படும் தகவல் கிடைக்கிறது. இது ஒரு புறம் இருக்க. மறுபுறம் அதுவே நமக்கு ஆபத்தாகவும் முடிகிறது.

நாம் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தையும் அந்த CHATGPT போன்ற AI சேகரித்து வைக்கிறது. அப்படி சேகரித்து வைப்பது மட்டும் இல்லாமல் அதை ஹேக்கர்ஸ் இடமும் google feeds போன்ற இடங்களிலும் நம்முடைய டேட்டாக்கள் அனைத்தும் விற்கப்படுகிறது. இதனால் இத்தகைய CHATGPT போன்ற AI முழுவதுமாக நம்பி இருக்கக் கூடாது என்று பல வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. எந்தெந்த விஷயங்களை பகிரக்கூடாது என்று பார்க்கலாம்.

மருத்துவ குறிப்புகள் :
CHATGPT போன்ற AI பயன்படுத்தி ஒருபோதும் மருத்துவ குறிப்புகள் கேட்க வேண்டாம். அவை அனைத்துமே தவறான தகவலை தரக்கூடும். நேரில் சென்று மருத்துவரிடம் ஆலோசனை வழங்கிய பின்பு மருந்துகளை எடுத்துக் கொள்வது சாலச் சிறந்தது என்று நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

ஹேக் செய்வது எப்படி :
சோசியல் மீடியா மற்றும் ஜிமெயில் போன்ற அக்கவுண்டுகளை எப்படி ஹேக் செய்வது என்ற கேள்விகளை கேட்க வேண்டாம். இது போன்ற கேள்விகள் சட்டத்துக்கு புறம்பானது. ஆகவே இதனை தவிர்ப்பது நல்லது.

சட்டதிட்டங்களை விசாரிப்பது :
சட்ட நடைமுறைகள் குறித்து AI சார்ந்து இருப்பது கண்டிப்பாக தீங்கு விளைவிக்கும். இதனை தவிர்த்து அங்கீகரிக்கப்பட்ட வழக்கறிஞர்களிடம் சென்று அவர்களிடம் ஆலோசனை பெற்று அதன் படி நடப்பதே சிறந்தது.

நிதி ஆலோசனைகள் :
வங்கி கணக்குகள் மற்றும் நிதி சார்ந்த ஆலோசனைகள் உதாரணத்திற்கு பங்கு சந்தை குறித்த சந்தேகங்கள் இவை அனைத்தும் CHATGPT இடம் தவிர்க்க வேண்டிய விஷயமாகும். இதனிடம் ஆலோசனை கேட்டு பங்கு சந்தையில் ஈடுபட்டால் பெரிய நஷ்டம் வரக்கூடும் என்று வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. ஆகவே முறைப்படி பங்குச்சந்தையை கற்றறிந்து அதன்படி நடப்பதே சிறந்தது.

வெடிகுண்டு பற்றிய சந்தேகங்கள் :
வன்முறை தீங்கு அல்லது ஆபத்தான விஷயங்கள் எந்த ஒரு கேள்விக்கும் CHATGPT பதில் அளிக்காது. ஏனென்றால் பாதுகாப்பு மற்றும் நெறிமுறைகளை பின்பற்றி இது வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மாதிரிகள் கேள்விகள் அதனிடம் கேட்கப்பட்டால் மறுப்பு பதில் மட்டுமே வரும்.

Leave a Comment