பிரபல மொபைல் நிறுவனமான சியோமி தங்களது புதிய தயாரிப்பான Xiaomi Redmi Note 12 Turbo மொபைலை அறிமுகப்படுத்த உள்ளது. இதன்படி இந்த நிறுவனமானது வருகின்ற ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி இந்த மொபைலை சந்தையில் அறிமுகப்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
செயல்திறன்:

Redmi Note 12 Turbo மொபைலானது Snapdragon 7 Plus Gen 2 சிப்செட்டையும், Octa core ப்ராஸசரையும் கொண்டுள்ளது. Ice Feather White, Star Sea Blue, Carbon Fiber Black என்ற நான்கு வண்ணங்களில் இந்த் மொபைல் நமக்கு கிடைக்கின்றது.
ஸ்டோரேஜ்:

Redmi Note 12 Turbo மொபைல் 8ஜிபி RAM மற்றும் 256ஜிபி இண்டெர்னெல் ஸ்டோரேஜ் வசதியையும் கொண்டுள்ளது. மேலும் இது இரண்டு நேனோ சிம் ஸ்லாட்டையும் கொண்டுள்ளாது. இது 5ஜி சப்போர்ட்டுடன் நமக்கு கிடைக்கின்றது.
திரை:
இந்த மொபைலானது 6.67இன்ச் OLED திரையுடன் 120Hz refresh ratewe உடன் நமக்கு கிடைக்கின்றது. மேலும் இது punch hole display வசதுயுடன் வருகிறது.
கேமரா:

இதன் பின்புறத்தில் 64MP வைட் ஆங்கிள் பிரைமரி கேமராவையும் 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமராவையும் 2MP மேக்ரோ கேமரா என 3 வகை கேமராவை கொண்டுள்ளது. இதன் முன்புறத்தில் 16MP செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது.
பேட்டரி:
Redmi Note 12 Turbo மொபைலானது 5500mAh பேட்டரி சப்போர்ட்டுடன் நமக்கு கிடைக்கின்றது. மேலும் இதன் 67வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தன்மை நமக்கு கூடுதல் வசதியளிக்கிறது.