latest news
மூளையில் சிப் பொருத்தும் முறை – மனிதர்களிடையே சோதனை நடத்தும் எலான் மஸ்க்-இன் நியூராலின்க்!
உலகின் முன்னணி பணக்கக்காரர் எலான் மஸ்க் மனித மூளையில் சிப் பொருத்தும் தனது ஸ்டார்ட்அப் நியூராலின்க் நிறுவனம் மனிதர்களிடையே பரிசோதனை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றிய அறிவிப்பை எலான் மஸ்க் பிரான்சில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.
பாரிசில் நடைபெற்ற விவாடெக் நிகழ்வில், நியூராலின்க் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், மனித மூளையில் டெட்ராகிராஃபிக் அல்லது பாராப்லெஜிக் நோயாளிகளின் மூளையில் சிப் பொருத்த திட்டமிடுவதாக தெரிவித்துள்ளார். எனினும், எத்தனை நோயாளிகளிடம் இந்த பரிசோதனை நடத்தப்படும் என்றும், எவ்வளவு காலம் நடத்தப்படும் என்பது பற்றியும் எந்த தகவலும் வழங்கவில்லை.
“இந்த ஆண்டு இறுதிக்குள் முதல் நோயாளியிடம் இந்த பரிசோதனை நடத்தப்பட இருக்கிறது,” என எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார். கடந்த மாதம் நியூராலின்க் நிறுவனம் அமெரிக்க உணவு மற்றும் மருத்துவ ஆணையம் (FDA) மனிதர்களிடம் பரிசோதனை நடத்துவதற்கான அனுமதியை வழங்கியது. முன்னதாக விலங்குகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையை ஆய்வு செய்த FDA, பரிசோதனையை மனிதர்களிடம் நடத்த அனுமதி அளித்துள்ளது.
மனிதர்களின் மூளையில் சிப் பொருத்துவது மற்றும் அறுவை சிகிச்சைக்கு ரோபோட்களை பயன்படுத்த நியூராலின்க்-க்கு அனுமதி அளித்து இருக்கிறோம் என்று FDA ராய்ட்டர்ஸ்-க்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது. எனினும், இதுபற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. பரிசோதனையின் போது நியூராலின்க் தனது சாதனம் மனிதர்களுக்கு பாதுகாப்பானது என்று நிரூபிக்கப்பட்டால், இனினும் பல ஆண்டுகள் அல்லது தசாப்த காலக்கட்டத்தில் வர்த்தக ரீதியில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.
தற்போது மருத்துவ பரிசோதனைக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில், வர்த்தக ரீதியிலான பயன்பாட்டுக்கு அனுமதி பெறுவதும் அவசியம் ஆகும். இந்த துறையில் நியூராலின்க் நிறுவனம் மற்றொரு நியூராடெக் நிறுவனங்களுடன் போட்டியை எதிர்கொண்டு இருக்கிறது. மற்ற நிறுவனங்களும் நியூராலின்க் போன்றே மனித மூளையில் தங்களின் சாதனங்களை பொருத்துவதற்கு முயற்சித்து வருகின்றன.
2019 முதல் பல சமயங்களில் நியூராலின்க் நிறுவனம் தனது திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டு, பின் அவற்றை நிறைவேற்ற தவறி இருக்கிறது. எலான் மஸ்க், தனது நியூராலின்க் விரைவில் மனிதர்களிடையே பரிதோதனை நடத்த இருப்பதாக பல சமயங்களில் அறிவித்து இருக்கிறார். 2016-ம் ஆண்டு துவங்கப்பட்ட நியூராலின்க் நிறுவனம் கடந்த ஆண்டு துவக்கத்தில் FDA-விடம் இருந்து அனுமதி பெற்றது. எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி ரத்து செய்யப்பட்டது.