Connect with us

tech news

எக்ஸ் தளத்தில் புது அப்டேட்- மாஸ் காட்டிய மஸ்க்

Published

on

எலான் மஸ்க்-இன் எக்ஸ் வலைதளத்தில் புதிய அம்சம் வழங்கப்படுகிறது. ஐபோன் பயன்படுத்துவோர், வலைதளத்தில் வெப் வெர்ஷனை பயன்படுத்துவோர் இந்த அம்சத்தால் பயன்பெறலாம். புதிய அம்சம் தங்களது டைம்லைனில் அதிக பொருத்தமான தரவுகளை பார்ப்பதை வழி செய்யும்.

இதற்காக புது மெனு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மெனு பயனர்களுக்கு காண்பிக்கப்படும் பதில்களை பிரிக்கும். ஐபோன் மற்றும் வெப் பயனர்கள் டிராப்-டவுன் மெனுவில் most relevant, most recent மற்றும் most liked என மூன்று ஆப்ஷன்களை காண முடியும்.

இவற்றில் பயனர் தேர்வு செய்யும் ஆப்ஷனுக்கு ஏற்றார்போல் பதில்கள் பட்டியலிடப்படும். இது தொடர்பான அறிவிப்பு எக்ஸ் தளத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் வெளியாகி இருக்கிறது.

முன்னதாக எக்ஸ் தளத்தில் வெளியான அப்டேட் ஒன்று, பயனர்களுக்கு வெரிஃபைடு அக்கவுண்ட்களின் ரிப்ளைக்களுக்கு முன்னுரிமை அளித்து காண்பித்தது. இவ்வாறு காண்பிக்கப்பட்ட பெரும்பாலான ரிப்ளைக்கள் அர்த்தமற்றவையாகவும், தேவையற்ற ஒன்றாகவும் இருந்தது.

புதிய அம்சம் மூலம் பயனர்கள் தங்களுக்கு பொருத்தமான அல்லது அவர்கள் பார்க்க விரும்பும் தகவல்களை மட்டுமே பார்க்க முடியும். எனினும், இந்த அம்சம் ஒரு ரிப்ளையில் தேர்வு செய்யப்பட்டால் அது தானாக சேவ் ஆகாது.

மாறாக பயனர்கள் ஒவ்வொரு முறையும் அதனை தேர்வு செய்ய வேண்டும். இது மட்டும் துவக்கத்தில் பலருக்கும் தேவையற்ற வேலையாக தோன்றும்.

சமீபத்தில் தான் எக்ஸ் தளத்தில் பேமண்ட் சேவையை வழங்குவதற்கான டெஸ்டிங் துவங்கியது. எலான் மஸ்க் குறிக்கோளின் படி எக்ஸ் தளத்தை எல்லாவற்றுக்குமான செயலியாக மாற்றும் முடிவுகளில் பேமண்ட் அம்சம் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

google news