Connect with us

tech news

இந்தியாவில் முதல்முறை.. கூகுள் Foldable போன் அறிமுகம் – எப்ப தெரியுமா?

Published

on

கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டை ஏற்கனவே அறிவித்துவிட்டது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி புதிய பிக்சல் போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த நிலையில், பிக்சல் 9 சீரிஸ் மாடல்களுடன் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்டு மாடலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதனை கூகுள் புதிய டீச்சர் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறது.

அந்த வகையில், முதல் முறையாக இந்தியாவில் கூகுள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் முதல் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பான டீசர்களில் புது ஃபோல்டபில் போன் மாத்திரை வடிவிலான கேமரா கட்-அவுட் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.

இந்த மடிக்கக்கூடிய சாதனத்தில் பன்ச் ஹோல் ரக கேமரா வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அமெரிக்க சந்தையில் பிக்சல் ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 1799 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,50,450 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்டு மாடலின் விலை அமெரிக்க சந்தையில் இருப்பதை விட அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.

அமெரிக்க சந்தையில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி நடைபெற இருக்கும் மேட் பை கூகுள் (Made by Google) நிகழ்வு இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு துவங்குகிறது. இந்த நிகழ்ச்சியை கூகுள் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ யூடியூப் மற்றும் கூகுள் ஸ்டோர் வலைதளங்களில் நேரலை செய்ய உள்ளது.

google news