tech news
டக்குனு சார்ஜ் ஆகிடும்.. 100W ஹூவாய் சார்ஜர் அறிமுகம்
ஹூவாய் நிறுவனம் சத்தமின்றி தனது புது சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக சீன சந்தையில் இந்த சார்ஜர் அறிமுகமாகி இருக்கிறது. இதன் விற்பனை JD வலைதளத்தில் நடைபெறுகிறது.
புதிய ஹூவாய் சார்ஜர் 100W திறன் கொண்டுள்ளது. இது 100W GaN சார்ஜர் ஆகும். தோற்றத்தில் வெள்ளை நிறம் கொண்டுள்ள இந்த சார்ஜர், பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த சார்ஜர் எளிமையான டிசைன் கொண்டுள்ளது.
இத்துடன் மடிக்கக்கூடிய பின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது சார்ஜரை எங்கும் எடுத்து செல்லக்கூடியதாகவும், சிக்கல் இன்றி ஸ்டோர் செய்து கொள்ளவும் வழி செய்கிறது. மடிக்கக்கூடிய பின் கொண்டுள்ள இந்த சார்ஜரில் ஹூவாய் நிறுவனத்தின் டூயல்-சேனல் கரண்ட் ஷேரிங் ஆர்கிடெக்ச்சர் வழங்கப்பட்டுள்ளது.
கனெக்டிவிட்டிக்கு இந்த சார்ஜரில் USB A மற்றும் USB C போர்ட் ஒருங்கிணைந்து வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பிரத்யேக USB C போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சார்ஜரில் வழக்கமான – PD/PPS/QC போன்ற வழிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. இந்த சார்ஜர் சந்தையில் கிடைக்கும் ஏராளமான சாதனங்களுடன் சீராக இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது 100W திறன் கொண்டது ஆகும்.
ஹூவாய் நிறுவனம் முதல் முறையாக GaN வழிமுறையிலான சார்ஜர்களை உருவாக்கி இருக்கிறது. தற்போது விற்பனை செய்யப்படும் ஹூவாய் சார்ஜர்கள் அதிகபட்சம் 88W திறன் கொண்டுள்ளன. அந்த வகையில், புதிய 100W மாடல் அதன் டாப் என்ட் வெர்ஷனாக பார்க்கப்படுகிறது.
விலையை பொருத்தவரை ஹூவாய் 100W GaN சார்ஜர் 349 யுவான்கள் இந்திய மதிப்பில் ரூ. 4,083 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சார்ஜரின் இந்திய வெளியீடு குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.